Community

எதிர்காலமும் விவசாயமும்!ii

இனி எங்கு தேடுவேன் ரவை, அரிசி, கோதுமை?
தலைவிரித்து ஆடுகிறது ஆங்கில உணவின் கொடுமை !

மேல்நாடு செல்ல விசா எடுக்கும் மக்கள் ஒரு பக்கம்,
மேல்நாட்டு உணவான பீசா-விற்கு அடிமையான மக்கள் மறு பக்கம் !

கனியை விட்டு கணினியிடம் சென்ற மனிதனே,
விதையை விட்டு விஷத்தை எடுத்தான் விவசாயி !

அன்று, பிறர் பசி போக்க கடன் வாங்கி
பயிரிட்டவனே,
இன்று, உன் பயிரையே உண்டு வட்டியுடன் கடனைக் கேட்கிறான் மனிதனே !

அடுத்த தலைமுறையும் தேடுவான்,
அகராதியில் கண்டு அறிந்திடுவான்,
விவசாயம் நாட்டில் இருந்ததென,
விவசாயி என்பவன் வாழ்ந்தானென,
பார்த்து ரசிப்பான் வலைத்தளத்தில்,
பத்தாவது மாடியின் மடிக்கணினியில் !!

வெறும் கேள்விக்குறியிலும் ஆச்சரியக்குறியிலும் இருக்கும் இத்தலைமுறை விவசாயியின் குமுறலுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் எதிர்காலத்தின்
நாளெதுவோ?
-அனுமிதா செந்தில்குமார்

5 Likes

Sprb ka​:heavy_heart_exclamation::heart_eyes::heavy_heart_exclamation::heart_eyes::heavy_heart_exclamation::heart_eyes::heavy_heart_exclamation:Nice lyrics :+1::v:

1 Like