Community

வலி உணரும் தருணம்

வலி உணரும் தருணம்

சிறு வயதில்

தோழிகளோடு

திருட்டு மாங்காய்

அடிக்கும்போது…

தடிகொண்டு விரட்டிய

தோட்டக்காரரின் வலியை

உணர்ந்ததேயில்லை…

பாசத்தோடு வளர்த்த

ரோஜாச் செடியில்

பூத்த ரோஜாக்களை…

யாரோ ஒருவர்

பறித்துச் செல்லும் வரை…!!

வலியென்னவோ

ஒன்றுதான்…!

அதை உணரும்

காலம் தான்

இங்கு மாறுபடுகிறது…!!

                 -கவிதாயினி-
1 Like