Community

ஓவியமாகிய இயற்கைக்கு

தேவலோகத்தையே உலா வருவதை போன்ற
ஓர் பிரமிப்பு -மூடுபனியே நீ
என்னை சூழ்ந்து கொள்கையில் !..

வெல்வெட் மெத்தைகள்
இதமாய் இல்லை -புல்வெளியே
உன்மீது என் பாதம் படருகைள் !..

துவாரத்தின் அர்த்தத்தை
உணர்ந்து கொண்டேன் -ஒளியே
சோலை இடுக்குகளுக்குள் நீ
ஊடுருவ வழி தேடுகையில் !..

லிப்ஸ்டிக் இதழ்கள்
அழகாக தோன்றவில்லை -மரங்களே
உன் கிளைகளில்
பாசைகளை பார்க்கையில் !..

தாயின் அரவணைப்பை
மறந்தே போனேன் -தென்றலே
நீ இலைசேயினை தாலாட்டுகையில் !..

முத்துக்களை பார்க்க
விருப்பமில்லை -வென்பனியே
புல்நுனிதனில் நீ மின்னுகையில் !..

மொத்தத்தில்…

வார்த்தைகளை கவிகளாக்கி
வர்ணிக்க இயலா எண்ணங்களோடு
பதித்து விட்ட நினைவுகளோடு
இரு கரங்களின் சங்கமம் மட்டும்
நன்றியறிதலோடு -

ஓவியமாகிய இயற்கைக்கு -

T.ரேவதி ரேய்ச்சல்