Community

இரவின் எழில்

இரவின் எழில்:

கருந்திரை மூடிய வான் ;
யாமம் கொள் நிறை நிலா ;
நட்சத்திரப்பூ சூழ் புடவி;
குளிர் கொண்டு தீண்டும் காற்று ;

இரவையே ,
என் அழகியே,
உனை எஞ்சியது ஏதேனுமுண்டோ !
என் கண் நோய்த்தீர்க்கும் அமிழ்து ;

அடி நெஞ்சே,
கண்ணுறங்காயோ கிளியே;
இவ்விரவின் அழகில் மூழ்கியே;

நிலவே,
என் பிணி தீர்க்கும் கனியே,
இவ்வினி யென்றும் குறையுமென
நினைத்தாயோ,
உன்மேற் காதல்…

இவள் ,
கலையரசி சாமிராசா …

2 Likes

Wishing you to shine more and more in your life. Jesus loves you always

1 Like

வாழ்த்துக்கள் :white_flower: :white_flower: :
நீங்கள் இயற்கையின் மீது கொண்ட காதலை இக்கவிதை வரிகள் மிக ஆழமாக உணர்த்துகிறது.
. நீங்கள் பயன்படுத்தியுள்ள தமிழ் வார்த்தைகள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளது.
நன்றி .

1 Like