Community

வழுக்கி விழும் விழுதுகள்

வழுக்கி விழுந்த தாயின் கருவறையிலிருந்து!
வாழ்க்கை தொடங்குகிறது,
நடந்து ஓடுவதர்க்குள் விழுவது
வீழ்வதற்கு அல்ல! எழுவதற்கு - என்பதை உணர வைக்கும்!
வழுக்கி! எழுந்த! வாழ்க்கை!

கொஞ்சி விளையாடும் குழந்தை!
தேகம் சிவந்த மங்கை!
மலரின் இதழ்கள்
போர்த்திய மடந்தை!
ஆவல் கொண்டு
உலா வரும் அறிவை!
தெளிந்த நீராய்
மனம் கொண்ட தெரிவை!
எல்லாம் கடந்து
எழுந்து வந்த பேரிளம்!
இந்த பருவங்கள் எல்லாம்
வழுக்கி விழும் விழுதுகளோ!
வழுக்கும் பாறைகளாக!
சில காம உருவங்களோ!

விமர்சனங்களை சுமந்து!
சீண்டல்கள் கடந்து!
பாலியல் இச்சைகளை துடைத்தெரிந்து!
தன் உடலின் மீதான
வருணனைகளை வசைப் பாடி!
துன்பங்களை இசைப் பாடி!
நவீன உலகில் போராடி!
வழுக்கி விழுந்து! எழுந்து! வாழ்க்கையை வாழும் விழுதுகள்!

சட்டங்கள் தூங்குகிறது!
அதிகாரங்கள் பணத்தை நோக்கி
விழுதோடுகிறது!
குற்றங்கள் வெள்ளம் போல்
பெருகுகிறது!
தண்டனைகள் விற்கப்படுகிறது!
கொரனோ முடக்குகிறது!
பொருளாதாரம் வழுக்குகிறது!
எப்போது மனிதம் காக்க போகிறதோ?
கருப்பு துணி அணிந்த
நீதி தேவதையின் கண்கள்
எப்போது காண போகிகிறதோ?
வழுக்கி விழும் விழுதுகளை
காக்க போகிகிறதோ?

1 Like