Community

மழையின் கதறல்

வானிலிருந்து இறங்கி வந்து
வீதியெங்கும் உலா வந்து,

என்னை எண்ணி ஏங்கும்
உள்ளங்களை மகிழ்வித்து,

என் சொந்தங்களுடன் தங்கி
கடலில் கலந்து காணாமல் போவேன்,

ஓ மனிதா"

எனது வழித்தடத்தை உனது
நடை பாதையாக்கினாய்,

எனது இருப்பிடத்தை உனது
உனது வாழ்விடமாக்கினாய்,

நான் வரும் போது எனது வழித்தடம் வழியாக
எனது இருப்பிடத்தை தேடி அலைகிறேனே,

தவிர"

உன்னை ஒருபோதும் காயப்படுத்த
நினைத்ததில்லை,

நான் வரும் போது எனதருமை உனக்கு
புரியவுமில்லை,

என்னை சேமித்து வைக்க உன்னிடம்
இடமுமில்லை,

விழித்துக் கொள் என்னை
சேமித்துக் கொள்.

இப்படிக்கு,
மழையின் வடிவில் நான்.

2 Likes