Community

என்ன மொழி சொல்வேன்

ஆயிரம் வாசகம் தேடி அழைகிறேன்

அழகாய் கடைவிரிக்கிறது தமிழ்

கடலென வார்த்தைகளை உமிழ்ந்தாலும்

கடற்கரையில் தொலையும் சுவடுகளாய்

கண்டெடுக்க முடியாமல் குழம்புகிறேன்

என் வார்த்தைகள் மலையென குவிந்திருந்தும்

மௌனங்கள் மட்டுமே விடையாகிறது

உன்னை வரித்து சொல்ல மட்டும்

மொழி இன்னும் அமைந்தபாடில்லை

வார்த்தைகளுக்குக்கும் சிக்கி நீயும்

வடிவமாகி தொலைக்காதே

வஞ்சனையின்றி வதைத்துக்கொண்டே இரு…!

-பிரியதரிஷினி செல்வநாயகம்

1 Like