Community

மழையும் மனமும்

காலை கதிரவன் துவட்டி விடுவான் என மழையில் நனைந்து கொண்டே நிற்கும் சாலையோர மரங்கள் …

இடி ,மின்னல் மிரட்டினாலும்இடம் தந்த இலைகளில் இன்பமாய் மழைத்துளி…

பரபரப்பை தொலைத்த சாலைகள் …

தலைமறைவான மக்கள்…

மின் வெட்டை சமாளிக்கும் மெழுகு வர்த்திகள்…

சிறு வெள்ள நீர் ஓடும் தெருக்கள் அந்த நீரில் மிதக்கும் காகித கப்பல்கள்…

குடையின்றி கொஞ்ச நேரம் …

மழலையாய் மனசு…மழை அன்னையின் மடியில்…

ஏதோ பெற்று விட்ட உணர்வு இந்த நொடியில்…

1 Like