Community

ஆண் தேவதைகள்

ஆண் தேவதைகள்

ஒற்றை வரிக் கவிதை எழுதச்சொன்னால்
நான் எழுதுவேன் 'அப்பா 'என்று.

அப்பா கை பிடித்து
வீதியில் நடந்தால்
கர்வம் வரும்.

அப்பாவுடன் உரையாடினால்
தெளிவு பிறக்கும்.

பத்து மாதம் சுமந்து
இறக்கி வைத்த பாரத்தை
இறுதி வரை சுமந்திடுவாய்.

பாசத்தையும் அதிகம் வெளிப்படுத்தியதில்லை.
பதற்றத்தையும்
வெளிக்காட்டியதில்லை.

நினைவு தெரிந்து நான்
ரசித்த முதல் கதாநாயகன்
அப்பா.

தேவதைகள் பெண்களாகத்தான் இருக்கவேண்டுமா?

பிள்ளைகளைப் பெற்ற
எல்லா அப்பாக்களுமே
ஆண் தேவதைகள் தான்.