Community

லிஸியின் தொடைகள்

எதிர்வீட்டு லிஸி
எப்போதுமே சிரிப்பை
பரிசாக தரக்கூடியவள்.
வெகுஜனப் பெண்களைப்போல
இல்லை அவள்.
வித்தியாசமானவள்.
வீட்டிற்குள் புடவையில் தெரிவாள்
வெளியில் குட்டைப்பாவாடையில் வருவாள்.
அவள் தொடைகளை பற்றி அவளுக்கு
கவலையில்லை
அதுவும் கண் மூக்கு மாதிரியென்றே
சொல்லிக்கொள்வாள்.
பார்க்கும் பார்வையில் கோளாறு என்று
பாசிட்டிவ்வாக சொல்லுவாள்.
ஆனால் அவள் தொடைகளை பார்க்க
ஒரு இளைஞர் கூட்டம் காத்திருக்கும்.
லிஸி ஒரு கருப்புத்தாளில்
வெள்ளைப்புள்ளி போன்றவள்,
வெள்ளை மனசுக்காரி.
அவள் மார்புகளை பெரிதாக
மறைக்க முற்படுவதில்லை,
அதற்கும் அதே காரணம் சொல்லிக்கொள்வாள்.
லிஸி எடுத்த டியூசனில்
அவளுக்காகவே சேர்ந்த பையன்கள்கூட
பாஸ் செய்துவிட்டனர்.
அவளுக்கு வந்த
ஏகப்பட்ட காதல் கடிதங்களை வாங்கி
ஒரு பெரிய சூட்கேஸில்
சேமித்து வைத்ததாய் கேள்விப்பட்டேன்.
லிஸி என்னிடம் பேசியதேயில்லை.
ஒருநாள் லிஸிக்கு திடீரென்று
கல்யாணம் ஆகியது.
எல்லாமே மாறிப்போனது
குட்டப்பாவாடை சேலையானது
சேலை குட்டப்பாவடையானது
லிஸியின் தொடைகள்
அதற்குப்பின் வெளியே வந்ததே இல்லை.
லிஸி புணரப்படும் சத்தம் மட்டும்
என்வீடு வரை கேட்கும்
அதில் அவளுக்கு பெரிதாக
விருப்பமிருப்பதுபோல தெரியாது.
அடுத்தடுத்த நாட்களில்
லிஸியின் உடம்பில்
காயங்கள்.
உதட்டில்
நெற்றியில்
மார்புக்கு மேல்
ஒரு கையில்.
பால்கனியில் பேய் அரைந்ததுபோல
வந்து நிற்பாள்
கலையிழந்து
கண்களில் குழிவிழுந்து
கருவளையம் சூழ்ந்திருக்கும்.
அவள் புருசன்காரன்
அவள் கழுத்தோரம் ஒரு முத்தம் கொடுத்து
அவளை உள்ளே கூட்டிச் செல்வான்.
இழுத்துச்செல்வதாய் தோன்றும்.
ஒருநாள் லிஸி தூக்குப்போட்டுக் கொண்டதாய் சொன்னார்கள்,
தெருவே வந்து நின்றது.
அரை நிர்வாணமாக தூக்கில் இறந்துப்போயிருந்தாள்.
இப்போதும் தெருவே
அவள் தொடையை பார்த்தது.
பார்வை மாறியிருந்தது.
சதை எப்போதும்
சதையில்லையே!

1 Like