Community

மண்ணுயிரெல்லாம் போற்றினால்

மண்ணுயிரெல்லாம் போற்றினால் நுண்ணுயிரோடும் வாழலாம்.

அன்பை விதைத்த கரங்கள் இன்று…

அழிவை நோக்கிய கேடெனும் பயணம்.

சிற்றுயிர் கொண்ட பற்றுகள் அழிந்து…

சுயநலம் எனும் படுகுழி பாதையில்.

ஈவும் இரக்கமும் பதரென பறக்க…

தன்நிகர் மனிதன் விலங்கென தெரிவான்,

மனிதம் மாய்க்கும் மனிதன் இருக்க…

மண்ணில் எங்கும் மரணம் நிலைக்கும்.

சமநிலை எங்கும் தவறும் நேரம்…

சகலமும் இங்கு அவலக்கோலம்.

அஃதொரு வேலையில் அழிவெனும் கரத்தினை…

இயற்கை யன்னை இமயமென்றுயர்த்துவாள்.

மனிதம் போற்றும் உயிர்கள் துளிர்த்தால்…

மனதில் என்றும் ஈரம் நிலைக்கும்.

இதயம் கொண்ட ஈரம் மலையாய்…

இருள் குனம்மிகும் நுண்ணுயிர் மடுவாய்.

S. Jacob Meshak
6380270228

1 Like