Community

தாயின் மனகுமுறல்

பத்து திங்கள் சுமந்தவளையும்
தலைதூக்கும் வரை உன்னை
தோளில் சுமந்தவனையும் விட்டு
சென்றது ஏனோ…
பாசத்தின் பிணைப்பாய்
இருந்த பாலத்தை
உடைத்தது யாரோ…
வந்தவளை குறை
கூறவில்லை நான்…
தாய் தந்தையாக தான்
பார்த்துக் கொண்டால்
இருவரையும்…
ஏனோ சிலரின் சொல்கேட்டு
நான் கோபிக்க
உன்னவளின் கண்களில்
கண்ட நீரை தாங்காத
நீ ஏனோ விட்டுச் சென்றாய்
முதியோர் இல்லத்தில்…
சிறுவயதில் நீ செய்த
தவறுகளை தாங்கிய
இவளை தாங்காமல்
விட்டுச் சென்றது
ஏனோ…
ஆதரவற்று அந்நியமாய்
கிடக்கிறேன் ஒரு
முறையேனும்
ஏற்க மாட்டாயா என்று…
இவள் கரம் ஏங்குதடா
உன் மழலையை கையில்
ஏந்தி கொஞ்சி உறவாட…
யோசித்துப் பார் இந்த
நிலை நாளை உனக்கும்
வரலாம்…
வேண்டாம் மகனே
இந்த அவலம் பெற்ற
பிள்ளையை விட்டு
தவித்து நிற்கும் தாயின்
மனக்குமுறல் நான்
அறியேனடா…
இளமையில் உன்னை
கை தாங்கியவர்களை
முதுமையில் குழந்தையாக
காக்க நீ ஒரு
முன்னோடியாக இரு…
முதுமையில் வேண்டாம்
முதியோர் இல்லம்…

-அகிலா சதீஷ்

1 Like