Community

தமிழே தனித்துவம்

தமிழா தலையை நிமிர்த்து தமிழா தமிழா தடையை தகர்த்து
விடியும் விடியும் உன்னைப்பார்த்து
படியும் படியும் தமிழ் இனத்தை பார்த்து

நீயே உலகின் முதல் விதை அய்யனே அவற்றுள் முதல் மேதை

நாகரிக உச்சத்தை நட்டவன் கொடி

இளம் தலைமுறை நம் பண்பாட்டினை படி

இரத்தத்தில் நிறைந்த வீரத்தை விலகாதே

அநீதி படிந்த காலத்தை எதிர்கொள்ளவும் வியக்காதே

தாய் தமிழ் மொழி பற்றை மறக்காதே உன்னில்

தமிழின் தடம் இல்லா நிலம் உண்டா இவ்வுலகில்

அவன் குணத்தினை பதிக்க இடமுண்டா நிலவில்

அழியாதே அவன் கனாக்கெண்ட கனவில்

முடியாதே அவன் சாதனையை விளக்க நினைவில்

தடியோடு போ தம் உணர்வினை மீட்டு வா

முடிவோடு போ தமிழின் வரலாற்றை மீட்டு வா

காலத்தை வென்றவன் நீ

காதலினால் மனந்தவன் நீ

காற்றிலே கானம் இசைத்தவன் நீ

கலங்காதே மாண்ட மானுடம் மண்ணால் மலரும்

வரலாற்றைத் திருத்த எழுத்தாணியும் உன்னை தொடரும்

உன் இனம் கண்டு இந்த உலகமே உன்னை பெருமைப்படுத்தும்

சுவாசக் காற்றில் தமிழினை ஏற்று என்றும் பிணை முன்னோரின் கூற்று

காற்றிலே தமிழின் பெருமையை தூற்று

                      உதித்தவன் ,                                                                                      
                      RP. ஆகாஷ்