Community

கனவு - எல்லாக் கனவுகளும் நிறைவேறி விட்டதைப் போலவே கனவு வருகிறது

கனவு!

எல்லாக்
கனவுகளும்
நிறைவேறி
விட்டதைப் போலவே
கனவு
வருகிறது.

தூரத்தில்
தெரியும்
குளத்திற்கு
கானல் நீரா
கவிதை
எழுதுவது.

எந்த
நதியிலும்
மாநிலப்பெயர்
பச்சை குத்தப்
படவில்லை.

நேர்ந்து கொண்டு
பலவருடம்
ஆகியும்
நிறைவேற்றாத
கடவுளுக்கு… கடவுள்
என்று பெயர்
எதற்கு.

நிம்மதியான
தண்டவாள பயணத்தில்
என் இதயத்தை
தொலைத்து
நிற்கிறேன்.

நாய்களெல்லாம்
கதவில்
எழுதியது
நன்றிக்கெட்டவர்கள் உள்ளே ஜாக்கிரதை
என்று.

எதிரில் தெரியும்
ஏழைக்கு
உதவாமல்
கண்ணை மூடி
கடவுள் தியானம்
எதற்கு.

எல்லா
பாலைவனத்திலும்
ரோஜா
செடியில்
முட்கள் மட்டுமே
பூக்கிறது.

இப்போது கூட
எல்லாக்
கனவுகளும்
நிறைவேறி
விட்டதைப் போலவே
கனவு
வருகிறது.

1 Like