Community

மாடும் மனிதனும்

அது ஒரு அழகிய கிராமம் ராஜம்மாள் என்ற விவசாயி தனது தோட்டத்தில் மாடு ஒன்றினை வளர்த்து வந்தார் அது அவர்களின் பால் தேவையினை பூர்த்தி செய்து வந்தது. அதனுடன் இரண்டு காளை மாடுகளையும் வளர்த்து வந்தார் தன்னுடைய வயலின் உழவு வேலைக்கும் பயன்படுத்தி வந்தார் காலங்கள் ஓடின விவசாயம் செழித்து விளங்கியது.ஊரின் மிகப்பெரிய விவசாயியாகவும் விளங்கினார் இயற்கை உரம் மட்டுமே தனது தோட்டத்தில் பயன்படுத்த துவங்கினார் நல்ல விளைச்சலும் தந்தது இந்த சூழலில் தன் உழவு மாடு ஒன்று வயது முதிர்வின் காரணமாக முன்பு போல் உழவு பணி செய்ய முடியவில்லை அதன் காரணமாக மாட்டு வியாபாரியிடம் அடிமாட்டு விலைக்கு விற்கிறார் அவர் அதை இறைச்சிக்காக விற்கிறார் அந்த மாடு வெட்டப்படுகிறது அதை அறிந்த பசு பாதுகாவலர்கள் அந்த இறைச்சி கடைக்காரருடன் பிரச்சினையில் ஈடுபடுகின்றனர் வாக்குவாதம் ஏற்பட்டு மாட்டு இறைச்சி விற்றவர் கொலை செய்யப்படுகிறார் இதை அறிந்து அந்த பகுதியில் கலவரம் வெடிக்கிறது வீடுகள் உடைமைகள் சூறையாடபடுகின்றது கலவரத்தில் ஈடுபட்டோரை கைது செய்ய காவல் துறை முனைகிறது.கலவரக்காரர்கள் தப்புகிறார்கள் காவல்துறை பக்கத்தில் ஒரு வீட்டில் இருந்த காமிரா பதிவைக்கொண்டு கலவரக்காரர்களை கைது செய்கிறது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட பசுவதை எதிர்ப்பாளர்கள் அனைவர்க்கும் தண்டனை வழங்கப்படுகிறது 7 ஆண்டு கடுங்காவல் மேல்முறையீடு செய்கின்றனர்.மேல்முறையீட்டில் தண்டனை உறுதி செய்யப்படுகிறது கொலை செய்யப்பட்டவருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது அதனுடன் அவர்கள் சிறையில் செய்யும் வேலைக்கு வழங்கப்படும் கூலி கொலை செய்யப்பட்டவரின் மனைவிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு தரப்படுகிறது.தண்டனை வழங்கப்பட்டவர்களின் குடும்பம் சாப்பாட்டிற்க்கே திண்டாடுகிறது தன்னிடம் உள்ள சொத்து பத்துகளையெல்லாம் விற்று வறுமையின் பிடியில் சிக்குகின்றனர்.நீதி அடுத்தவர்களின் உணவு உரிமையில் தலையிட கூடாது உணவு என்பது அவரவரின் உரிமை பிறர் உரிமையில் தலையிடுவது சட்டப்படி தவறு, உப்பு திண்றவன் தண்ணிர் குடிக்க வேண்டும் என்பது பழமொழி கலவரம் செய்து கொலை செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கின்றனர் அதனால் அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்கள் குடும்பமும் கஷ்டப்படுகின்றது.