Community

கொரோனா பேசினால்

வணக்கம்,
அண்டை நாட்டில் பிறந்தவன் நான்
அன்னத்தின் முறையை எடுத்துரைக்க வந்தவன் தான்
அண்டம் முழுவதும் பரவிய என்னை
அண்டவிடாதவன் என்று ஏசுகிறார்கள்
எனக்கு உயிர் அளித்து பன்மடங்கு உருவாக்கி பின்
என்னை அழிக்க மனிதர்களே ஆராய்ச்சியும் செய்கின்றனர்
சிறுவனான எனக்கு இவர்களின் செயல்
சிறிதும் பிடிபடவில்லை!..
என்னை கண்டு உலகமே அஞ்சவும் செய்கிறது
என்னையே கேளிக்கையாக வைத்தும் சிரிக்கிறது
உங்கள் அனைவரையும் அழிக்க வந்தவனல்ல நான்
உலகத்திற்கு சுகாதாரத்தின் மேன்மையை புகட்ட வந்தவனே நான்
காதில் விழுந்த எச்சரிக்கைகளையும் கோரிக்கைகளையும்
காற்றில் பறக்க விட்டு விட்டு என்னை குறைபாடுவதா?
நானும் தன்மானம் மிக்கவன் தான்
நீங்களாக அழைத்து செல்லாத வரை
நானாக உங்கள் வீட்டிற்குள் வர மாட்டேன்😏…
- மேனகா.ஜெ (கனாக்குயில்)
menakaanjac@gmail.com