Community

காத்திருப்பு

வெகுநாட்களாய் காத்திருந்தேன் உன் வருகைக்காக…
உன்னை முதல்முதலாக நேரில் காணப்போகும் அந்த நொடி…

உன்னை கண்டவுடன் சிரிப்பேனா இல்லை அழுவேனா
என்னை கண்டவுடன் நீ என்ன செய்வாய் என்று
எனக்குள் பல கேள்விகள்…
உன் வருகைக்கான அந்த நாளும் வந்தது…

நீ…

நீ தான்… என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாய்…

நான்…

கனவு காண்கிறேனா
இல்லை இது நிஜம் தான்…

முதல்முதலாக உன் பார்வை என்னை தீண்டிய அந்த நொடி எனக்குள் மின்னல் பாய்ந்தது போன்ற உணர்வு…

ஆம்… உனக்குள் காந்த சக்தி, ஈர்ப்பு விசை இருப்பதை போல
மின் சக்தியும் இருக்கின்றது…

வறண்டு கிடந்த என் வாழ்வில் அன்பு மழையை பொழிய
வெகு தூரம் கடந்து எனக்கே எனக்காகவே வந்தாயோ?

இந்த மழை என்றும் ஓய்ந்துவிடக்கூடாது என்று எனக்குள் ஓர் எண்ணம்…
ஆனால் விரைவில் அது ஓயந்துவிட்டது…

மீண்டும் வறண்ட பூமியாய் என் வாழ்க்கை…
உன் வருகையை எதிர்நோக்கி ஏக்கத்துடன் நான்…