Community

பேராசிரியயை என்ற பேரழகி

இவள் நான் பார்த்து வியந்த கல்லூரிப் பேராசிரியை…
இல்லை இல்லை பேரழகி!
ஆம் இவள் ஒரு பேரழகி தான்…
தீப்பெட்டிக்குள் நூற்றுக்கணக்கில் குச்சிகள் இருந்தும்,
முதல் குச்சிக்குத் தானே முன்னுரிமை…
அதுபோல் போலி ஆயிரம் இருந்தும்
அவளுக்குத்தான் முதலிடம்…
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வையென
பாரதி கண்ட புதுமைப்பெண் அவள்!!
அலங்காரத்தில் வஞ்சகம் இல்லாதவள்
அதிகாரத்திலும் தோரணை மிக்கவள்
வகுப்பிற்கு வெளியே தோழி போன்றவள்
வண்ண உடையிலும் நேர்த்தி கொண்டவள்…
ஆம் இவள் நான் பார்த்து வியந்த கல்லாரிப் பேராசிரியை…
இல்லை இல்லை பேரழகி!!