Community

இன்பமாய் இருக்குதய்யா

‘இன்பமாய் இருக்குதய்யா’

X: ஏய் அங்க பாரு…:blush:

Y: புதுவரவா…!!என்னவாம்…?:innocent:

X:மேல பாரு…:upside_down_face:

Y:அடேங்கப்பா இன்னைக்கி ஜாலிதான் ரொம்பநாள் ஆகுதுல…:smiling_face_with_three_hearts::smiling_face_with_three_hearts:

X:ஏன் இப்டி அலையுற அந்தகதையா இருக்காது…:wink:

Y:ஏன் இப்டி மாறிட்ட…:face_with_monocle:

X:ஆமா எத்தனவாட்டிதான் செஞ்சத திருப்பி திருப்பி செய்றது வெறுப்பாயிட்டு…:upside_down_face::smirk:

Y:அப்போ பக்கத்துவீட்டு ஆண்டி வேணாம்…:crazy_face::crazy_face::rofl: ஹாஹாஹா…

X::thinking::thinking::thinking:

Y:என்ன பலமான சிந்தன…:slightly_smiling_face:

X:ஒன்னுமில்ல…நம்ம கேரக்டர படிக்கும்போதே அப்டி ஒரு தாக்கமா இருக்கனும்…படிச்சவன் மறக்கவேகூடாது…அப்டி ஒருகதை…எப்போதான் கெடைக்கும்னு யோசிக்கிறன்…நல்லா இருக்கும்ல…:smiling_face_with_three_hearts::innocent:

Y:நா நினைக்கிறன் இது லவ் ஸ்டோரினு…:nerd_face:

X:வாய்ப்பு இருக்கு…அந்த ஃபர்னிச்சரதான் ஈசியா உடைக்கலாம்…:joy::rofl:

Y:ஆமா இவன் எழுதுவானா இல்லையா…:thinking:

X:எழுத உடகாந்தான்
அவன் பையன் கணக்குல ஏதோ டவுட்டுனு கூப்டான் போயிருக்கான்…:blush:

Y:அப்போ பொறுமையா வந்தே ஃபர்னிச்சர உடைக்கட்டும்…:laughing:

X:சிறுகதைகுள்ள மாட்டிகிட்டதால நமக்கு இந்த நிலம…ஏதாது தொடர்கதைல இருந்தோம்னா லைஃப் நல்லா போயிருக்கும் இங்கதான் எத்தனை கேரக்டர்…முடியல…:innocent:

Y:தொடர்கதைல கஷ்டம் இல்லையா…போய் சிந்துபாத்த கேளு மண்டபத்ரம்…:stuck_out_tongue_winking_eye::crazy_face:

XY:ஹாஹாஹா:joy::joy:

X:புராணகதைல வரதுதான் கெத்து… ஒரு கூட்டமே கொண்டாடும்ல நமக்குதான் அது இல்லாமலே போய்ட்டு…இப்போ அப்படி கதை எழுதலா யாருமே இல்ல…:expressionless:

Y:அடேய் ஏன் இப்டி…இவனுங்க இருக்குற கதைக்கு அடிச்சுகிறது பத்தாதா உனக்கு…:grin:

X:சரியா சொன்ன அந்த கதைல செத்த மனுசனவிட இவனுங்க போட்ட சண்டைல போன உயிர் அதிகம்…:roll_eyes: உனக்கு ஒரு காமிடி தெரியுமா…இப்பதான் எனக்கு நியாபகம்‌ வந்துச்சு…:rofl:

Y:சொன்னா நானும் சிரிப்பன்ல
சொல்லிட்டு சிரி😉

X:இராமாயணத்துல இராமன் இராவணன கொன்ன‌ அப்பறம் இராவணன் லக்ஷ்மன்ட போய் என்ன கேட்டு இருக்கான் தெரியுமா…:sweat_smile:

Y:முழுசா சொல்லிட்டு சிரி
ம்ம் சொல்லு…:innocent::slightly_smiling_face:

இராவணன் to லக்ஷ்மன்
டேய் லக்ஷ்மன்
மஹாபாரதத்துல நீயாரு
நா…பீமன்
அப்போ நா… ?
நீ அர்ஜுனன்
திரௌபதிக்காக நாம சண்டபோட்டுக்கவே இல்ல
இங்கமட்டும் ஏன் இராமன் கொந்தளிக்கிறானு கேட்ருக்கான்…

XY:ஹாஹாஹா:joy::joy::joy:

Y:லக்ஷ்மன் என்ன சொன்னா ???

X ஆளவிட்ரானு ஓடிட்டானா…:sweat_smile::rofl:

Y:சரிசரி அடக்கிவாசி…:face_with_monocle::frowning:

X:அந்த வாலி சம்பவம் மட்டும் சொல்லவா…:stuck_out_tongue_closed_eyes::yum:

Y:வேணாம்பா…நீ டாப்பிக்க மாத்து…:shushing_face:

X:இவன் எப்போதா எழுதபோறான்…:woozy_face:

Y:அடவரட்டும் இரு…:hugs:

X:உனக்கு எந்த ஆசையும் இல்லையா…:slightly_smiling_face:

Y:இருக்கே… எதார்த்த வாழ்க்கைல நடக்குற சம்பவங்கள வச்சு எழுதுறகதையில வரணும்
ஒரு பத்துகத… அதுல கிடைக்கிற பத்து கேரக்டர் கொஞ்சபேரு மனசுல நின்னா கூட அதுபோதும்…:smiling_face_with_three_hearts::innocent:

X:இறந்துபோன யாராது இப்போ இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறியா…:thinking::roll_eyes:

Y:ஏன் அப்படி கேட்குற…

X:நம்ம எதிர்பார்ப்ப‌ அவங்க பூரத்தி செய்யலாம் தோனுது…:disappointed:

Y:அப்படி நினைக்கல ஆனா இப்ப உள்ளவங்க எப்டிலா எழுதபோறாங்க அப்டிங்குற ஆர்வம்தான் இருக்கு…:star_struck:

X:எப்படி எழுதுவானுங்க பாரு…:grin:

Y:வரமாறி இருக்கு…?

X:ஆமா வரான்…

(சிவா அங்கு வந்து அமர்ந்தான்…திரும்பி மகனை பார்த்து…
இந்த கணக்குல X And Y இரண்டுமே 1 ok…அடுத்த கணக்குக்கு X,Y நீயே கண்டுபிடி)

Y:ஏய் இங்க பாரு நம்மள பத்திதான் ஏதோ சொல்றான்…:slightly_smiling_face:

X:நம்ம இரண்டுபேருமே ஒன்னுனு சொல்றான்🙂

Y:ஹாஹாஹா…சரியாதான் சொல்றான்…:smiley:

X:இவங்கலா இல்லனாலும் நமக்கு வாழ்க்கை இல்லைல்ல…!!

Y:ஆமா வாஸ்தவம்தான்🤗

X:இத நினைக்கும்போது ஒன்னு‌ சொல்ல தோனுது…:heart_eyes::smiling_face_with_three_hearts::partying_face:

Y:என்ன…?:slightly_smiling_face:

X:மேல பாரு…:star_struck:

/பாலாஜி மேகா