Community

நான் மட்டுமே...!

முகமூடி இருந்தால் போட்டுக்கொள்
உன் அழகை ரசிக்க வேண்டும் நான் மட்டுமே!
.
அணை கூட கட்டிக்கொள்
உன் கண்ணீரை துடைக்க வேண்டும் நான் மட்டுமே!
.
காய்ந்து போகாமல் பார்த்துக்கொள்
உன் இதழ் சுவைக்க வேண்டும் நான் மட்டுமே!
.
நாள் முழுதும் மௌன விரதம் மேற்கொள்
உன் குரல் கேட்க வேண்டும் நான் மட்டுமே!
.
மேலாடை அவிழாது உடுத்திக்கொள்
உன் மேலாட வேண்டும் நான் மட்டுமே!
.
இரு வேளிகள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்
உன் தோட்ட பழம் ருசிக்க வேண்டும்
நான் மட்டுமே!
.
இரு இமைகளையும் திறக்க விடாதே
உன் விழி மதுவில் போதையாக வேண்டும் நான் மட்டுமே!
.
இரு இதழ் மேகங்களை உரச விடாதே
உன் முத்த மழையில் நனைய வேண்டும்
நான் மட்டுமே!
.
காதில் எதுவும் மாட்டிக்கொள்ளாதே
காதணியாக ஊஞ்சலாட வேண்டும் நான் மட்டுமே!
.
முடியாவிட்டாலும் முயற்சிக்காதே
உன் முதுகு காகிதத்தில் வரைய வேண்டும் நான் மட்டுமே!
.
முந்தானை அதை நழுவ விடாதே
உன் இடை தழுவ வேண்டும் நான் மட்டுமே!
.
உள்ளங்கை வைத்து மறைத்து விடாதே
இதழால் உன் கன்னக்குழி நிரப்ப வேண்டும் நான் மட்டுமே!
.

சீப்பு எல்லாம் பயன்படுத்தாதே
விரலால் உன் கூந்தல் வருட வேண்டும் நான் மட்டுமே!
.
கீழே தரையில் விழுந்து வாரிவிடாதே
உன் தோல் உரச வேண்டும் நான் மட்டுமே!
.
வேலை செய்து களைத்து விடாதே
முத்து வியர்வையை முத்தத்தால் துடைக்க வேண்டும் நான் மட்டுமே!
.
தங்கச்சங்கலி கழுத்தில் அணியாதே
உன் நெஞ்சுக்குழியில் நொறுங்க வேண்டும் நான் மட்டுமே!
.
வழலை இருந்தால் வீசிவிடாதே
உன்னுடன் நீராட வேண்டும் நான் மட்டுமே!
.
யாரிடமும் சமைக்க கற்றுக்கொள்ளாதே
தனியே உன்னுடன் சமைக்க வேண்டும் நான் மட்டுமே!
.
தண்ணீரை அதிகம் வீணடிக்காதே
நீராக உன்மேல் உருண்டோட வேண்டும் நான் மட்டுமே!
.
பரிமளம் எதுவும் பயன்படுத்தாதே
உன் சந்தன மேனி மணம் நுகர வேண்டும் நான் மட்டுமே!
.
மேடு பள்ளங்கள் சரிசெய்யாதே
அதில் தடுமாறி விழுகவேண்டும் நான் மட்டுமே!
.
இரவுக்கு என தனியே ஆடை வாங்காதே
இரா முழுதும் உன்னை உடுத்த வேண்டும் நான் மட்டுமே!
.
எந்த கவி கண்களிலும் பட்டுவிடாதே
உன்னை முழுதும் வர்ணிக்க வேண்டும் நான் மட்டுமே!
.
இதை படித்த வெட்கத்தில் ஒலிந்துவிடாதே
அதை பார்த்து சிவக்க வேண்டும் நான் மட்டுமே!

4 Likes