Community

உலகின் தொடக்கம் நீ

உலகின் தொடக்கம் நீ

மனித உயிர்களை பெற்று இவ்வுலகிற்கு
அறிமுகம் செய்வதே நீ பெண்ணே
“நீ ஒரு பெண் உணக்கெதற்கு இதெல்லாம்
கல்யாணம் செய்து குடும்பத்தோடு இரு”
என்னும் மூடவாக்கியத்திற்குள் மறைமுகம்
ஆகாதே…
சுற்றியிருக்கும் பேதைகளுக்கு செவி சாய்த்தால் சுழண்டோடும் சிறிய குடும்ப
சிறைக்குள் சிக்கி கொள்வாய் கூண்டு கிளியாய்,
சுத்தமாய் வீணாக போய் விடும் உன் பிறவி
அடுத்தவன் இயக்கும் சாவி கொடுக்கும் பொம்மையல்ல நீ
உலகின் தொடக்கம் உன்னால்
உயிர்களின் பிறப்பு உன்னால்
சுழலும் உலகை உருவாக்கி விட்டு
நீ ஏன் ஓரிடத்தில் சுருண்டுவிட வேண்டும்
உனக்கு துணை தேவை அன்று
உலகத்தின் தோற்றமே உன்னில் தொடங்க
உனக்கென ஒரு புறத்தோற்றம் அடையாளம் உருவாக்க ஓடத்தொடங்கு
பிறப்பு முதல் இறப்பு வரை பெண்ணொருவளின் சேவையும் துணையும் இன்றி ஆணினம் இயங்கா…
ஆணினத்திற்கு சேவை செய்ய உன் பிறப்பல்ல
உணக்காகவும் வாழ பழகு
ஏனெனில் நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு
தொடங்கு உன் பயணம்
உலக தொடக்கமே… :sunglasses::v:
_✍️கார்த்திகா