Community

இயற்கையின் அழகு

ரம்மியமான இரவுப்பொழுதில்
அழகான பௌர்ணமி நிலவொளியில்
காதுமடலைச் சீண்டிச்செல்லும்
குளிர்க்காற்றில்…
எழில் கொஞ்சும் பூஞ்சோலை நடுவில்
வெண்ணிறப் பனிச்சாரலாய்
கோபத்தோடு ஆர்ப்பரிக்கும் அழகோடு
இடியன முழங்கி பாய்ந்துக்கொண்டிருக்கும்
அருவியின் சாரலில்…
கருநிற மைத்தீட்டிய வண்ணம்
வானெங்கும் சூழ்ந்த மேகங்கள் மாரிமழையை பன்னீர்த் தூரலாய் தூவி வரவேற்றது எங்களை
அந்த பசுமை மாறா அடர்ந்தக்காடு…
பல இனப் பறவைகளின் ஓசையும்
காதிற்க்கு இதமான மெல்லிசையாய்
விருந்தளித்தது…
மிருகங்களின் இரைச்சலில் சற்று பயந்தாலும் அந்த மனமயக்கும் தருணத்தை விட்டு பிரிய மனம்
ஏற்கவில்லை எங்களுக்கு…

  • க. பணிமொழி