Community

ஒருதலைக்காதல்

காதல்
ஒருதலையாய் இருக்கும்போது மட்டுமே காதலாயிருக்கிறது…
இருதலையாகி விட்டால்
எதிர்பார்ப்பில் கட்டுண்டு அடங்கி விடுகிறது…
வலியிலும் சுகம் அதில் மட்டுமே உண்டு
உணர்ச்சியுடன் உச்சரித்தால்
உள்ளிருக்கும் செல்லைத் தூண்டி இழுக்கும் ஆற்றல் கொண்டு
உன் ஒரு பார்வைக்காக காத்திருந்த தருணங்கள்
ஆயுள் முடிந்தாலும் அழியாத பொக்கிஷங்கள்
மிதிவண்டிப் பயணத்தில் உன் தொடர்வண்டியாய் பயணித்த நினைவுகள்
பசுமரத்தாணி பதிவாய் நெஞ்சுக்குள் ரீங்காமிடுகின்றன
நினைவுகளோடு நினைவாய்
நானும் நிற்கின்றேன்…
என்றாவது நாமும் கட்டுப்பட்டுவிடமாட்டோமா என்று…?

2 Likes