Community

கல்கி(கற்பனை)க் காதல்

புதுவெள்ளம் பொங்கிப் பெருகி வரும்

காவிரிக்கரை மீது காதல்

செழிப்போடு விரிந்து கிடக்கும்

சோறுடைத்த சோழநாட்டின் மீது காதல்

புகழ்பரந்த அந்நாட்டின் வேந்தன்

பார்ப்போர் ரசிக்கும் அழகுமிக்க

சுந்தரசோழன் மீது காதல்

யாவரும் அஞ்சி நடுங்கும் ஆற்றல் கொண்ட

உலகையே வெற்றி கொள்ளத் துடிக்கும்

ஆதித்தகரிகாலனின் மீது காதல்

மக்களின் மன சிம்மாசனத்தில்

சம்மணமிட்டு அமர்ந்திருப்பவனும்

போர்க்கலையில் தீரனுமாகிய

இராஜராஜசோழனின் மீது காதல்

தம்பியை அரசாள ஆசை கொண்ட

நீள்விழிக் கண்மணியாள்

சோழ இளவரசி குந்தவை மீது காதல்

வாணர்குல வீரனாய்

ஆதித்தனின் அன்புத் தோழனாய்

குந்தவையின் நேசம் பெற்ற

வந்தியத்தேவன் மீது காதல்

பருவ எழில்கள் பூத்துக்குலுங்க

பார்வையிலேயே மனதை ஊடுருவி

மயங்கச் செய்யும்

மாயமோகினி நந்தினியின் மீது காதல்

தன் தலைவனைக் கொன்றோரை

வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட

பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் மீது காதல்

இன்னும் இன்னும் எத்தனை காதல்களோ…?

இது கல்கி(கற்பனை)க் காதல்!!!