Community

காகித பட்டமும் காற்றருத்த நூலும்

வானம் வரை செல்வோமா…
சென்றால் பறப்பபோமா இல்லை மிதப்போமா …
எதுவரை செல்வோம் சொல்
சேர்ந்தே செல்வோம் இருவரும்…

நாம் உயர உயர சென்றால் அனைவரும் மகிழ்வாரோ இல்லை உயர செல்ல உதவுவாரே…

நீயின்றி நானும்,நானின்றி நீயும்…
வானை அடைவது சாத்தியம் தானா?
சத்தியம் செய்து சொல்
இன்றே முயன்று பார்க்கலாம் …
முடியாதேன்றால் சோர்வடையால் சேர்ந்தே செல்லலாம்… …

நம்மை இணைத்தது யாரோ யாரோ…
ஒருவேளை
நாம் இணையாமல் இருந்திருந்திருந்தால், நான் மண்ணோடு மண்ணாய் மக்கி போயிருப்பேன்…
நீ எங்கே ஓரிடம் சுற்றிக்கொண்டிருப்பாய்…
நம்மை இணைத்தது யாரோ யாரோ நன்றி சொல்வோம்…

இத்துணை இன்புற்று பல கனவுகளை சுமந்து சுற்றி கொண்டிருக்கும் நம்மிடம்,
மெல்ல காதல் சொல்ல கட்டியணைத்து, இன்பமாய் வீசுகிறது காற்று.
நாம் பிரிந்து விட்டோம் என்பதறியாமல்…
மு.பிரேமா.