Community

எங்கே கடவுள்?

எங்கே கடவுள்.?

கும்பகோண‌ தீ விபத்திலே
குழந்தைகள் கருகிய போதும்
போர்களிலே குண்டுகள்
மார்களில் பாய்ந்த போதும்
சுனாமியும் சூறாவளிகளும்
கொத்துக் கொத்தாய் உயிர்களை
சூறையாடிய போதும்…
கருணை பிறந்து
காப்பாற்றாத கடவுள்
உன் சுயநல வேண்டுதலுக்கும்
கடவுளிடம் சென்றடையாது என‌த்தெரிந்தும் நீ போடும் காணிக்கைகளுக்குமா
மனமிரங்கப்போகிறார்…
செல்வத்தையும்
மகிழ்ச்சியையும்
உடல்நலத்தையும்
தருபவர்தான்
கடவுள் என்றால்
அதை நீ மற்றவர்களுக்கு
கொடுத்து
நீயும்
கடவுளாகு…
By…
ராபின்மணி
நல்லூர்…