Community

வள்ளுவர் கூறும் அறம்

வள்ளுவர் கூறும் அறம். கவிதை.உவமை யில்லான் தாள் சேர்! உயிர்கள் உய்ய, மழை பொழிய. உவந்து செயற்கரிய. செய்க.! உயிர் ஆக்கத்திற்கு மாசற்றிரு ! பிறர் போற்ற. அறம் செய்ய., கற்புடையாளைத் துணை கொள்.! அறிவார்ந்த. மக்களைப்பெறு! அன்பின் வழியில் நில்.! இல்வாழ. விருந்தோம்பு ! இன் சொல் பேசி , பணிவுடனிரு! செய்ந்நன்றி மறவாதே! செப்பமுடையானாயிரு ! கதம் காத்து கற்றடங்கு! உலகத்தோடு ஒட்ட ஒழுகு! பிறன் மனை நோ க்காதே! பொறையுடைமையைப்போற்று ! பொய்த்து வாழாதே! புறங் கூறாதே! பிறர்க்குரியதை விரும்பாதே ! பயனுடைய. பேசி, பண்பாக வாழ்! தீயவை செய்யாதே! பயன் மரமாயிரு! இரந்தார்க்கு இசைபடக்கொடு ! அருளோடு வாழ் ! ஊன் பெருக்க. ஊன் உண்ணாதே! தவம், தவமுடையார்க்கே! படிற்றொழுக்கம் ஏதம் தரும்! களவு தந்த. ஆக்கத்தை ஒழி! உள்ளத்தால் பொய்யாதொழுகு ! உள்ளியது எய்த வெகுளி விடு! எவர்க்கும் இன்னா செய்யாதே! எவ்வுயிரையும் கொல்லாதே ! நிலையாமை யை உணர்! நிதம் , பற்றற்றானை ப்பற்று! பிறப்பற. செம்பொருள் காண்.! விருப்புடன் அவா அறு! ஊழின் பெருவலியினின்று உய்ய. ! உவமையில்லாதான் தாள் சேர் ! நன்றி ! செ.கலைவாணி, 4/1-75C. ஸ்ரீநகர் 2ம்தெரு, இராமன் நகர் அஞ்சல், மேட்டூர் அணை 3-636403.