Community

காப்பு அணிந்த கையே

களத்துமேட்டில் கதிரடித்து
காய்த்த உன் கைகளால் என்
சிரத்தை கோதும் போது அந்த
சிகரத்தையும் எட்டி பிடிப்பேனே
களை எடுத்து காய்த்த உன் கைவிரல்களால் என் கன்னத்தை தீண்டும் போது என் கனத்த இதயமும் கசியுதே அம்மா என் கண்ணின் வழியே
அன்று வளைகாப்பு அணிந்து என்னை வரவேற்ற அன்னையே ஆனால் இன்று காய்த்த காப்பு அணிந்து என்னை கரைசேர்த்தாயே உன்னக்கு என்ன
கைமாறு செய்வேனோ நான் அந்த கைலாசம் செல்லும் வரை