Community

உங்கள் நான்..முன்னுரைக்கான என்னுரை

எதேச்சையாக எழுந்த எழுத்தாளன்…
காலப்பொழுதை கழிக்க கனிந்த கால்வாசிக் கவிஞன்…
வாழ்க்கையின் அர்த்தம் புரிய
படிப்பகம் வந்த வாசிப்பாளன்…
வறுமையின்
வாடிக்கையாளன்…
தோல்விகளின்
தோழன்…
கிழிசல்களோடு வாழ்கின்ற
கிளிஞ்சல்…
சோகங்களின்
அஞ்சல்…
விரக்தியின் விருந்தாளி…
பக்தியின் பகையாளி…
சமத்துவத்தை விரும்பும்
ஒரு சாதாரணம்
சாமானியனுக்கு ஒரு
உதாரணம்…
ஓட்டு வீடு எனும்
ஓட்டை வீட்டுராசா…
விலைமதிப்பில்லாத வீதியில்
பூத்த ரோசா…
வேலிகளின்‌ நடுவே
பூத்த கள்ளிப்பூவான
நல்லூர்பட்டியின்
நடுத்தரவர்க்க
காளியப்பனின்
கடைக்குட்டிக்கு மூத்த
மகன்…
உங்கள் நான்…
By…
K.RobinMani…
NALLUR…
9787978593