Community

அவளில்லா தனிமை

சிந்தனையில் ஓர் சிறுமாற்றம்
அவளால் எனக்குள் ஓர்‌ உருமாற்றம்
யாசித்த ஆசைகளையெல்லாம்
சுவாசித்தேன் அவளால்…
சொர்க்கலோக வாழ்க்கையையும்
சொடுக்கு போடுமளவு ரசித்தேன்
இளம்பிறை போல் அவள்‌ வந்தால் கூட
மனதுக்குள் ஓர்
தொடர்விடுமுறை போல் மகிழ்ச்சி…
காதல் கனிந்த அளவுக்கு
சில காலமும் கனிந்தது…
உயர்வே இல்லாத ஊதியத்தில் நான்
உயர்வான ஊதியத்தில்
அவளுக்கான வரண்
இக்கட்டான நிலையில்லா மனம்
அவளில்லாமல் நிச்சயம் நான் பிணம்…
வாரிவழங்கிய வாக்குறுதிகளெல்லாம்
உறுதியிழந்து வாசலுக்கு வெளியே…
அவளுக்கான
அனைத்து உறவுகளுமாய் நான்…
அவளின் அனைத்து உறவுகளுக்காக
அவள்…
சாதி மதங்களும் சந்தடி சாக்கில் சாயம் பூசிச் சென்றன…
இரத்தமில்லா இதயத்தவள் போல்…
வார்த்தைகளால் சில யுத்தம் செய்து சென்றாள்…
என்‌ வாழ்வினையே வேரறுத்து கொன்றாள்…
நீதான் உயிர் என்று உரைத்த என்னை…
போனால் போகட்டும் மயிர் என‌ உதிர்த்துவிட்டு…
ஒருமனமாய் திருமணம் முடித்தாள்…
என்னிடம் வெறுமனே நடித்தாள்…
உயிரில்லாத உடம்பாய்
உலவுகிறேன்
எதிர்கால பயணத்திலிருந்து நழுவுகிறேன் அவளால்…
விட்டுச் சென்ற‌ உன்னை
தினம் தொட்டுச் சொல்கிறது கண்ணீர்…
நான் காத்திருந்து எனை கைவிட்ட உனக்காக
எனக்காக வாழும் சில உறவுகளை எப்படி கைவிடுவது…
இறக்கும் வரை இருப்பேன்
இரும்பு நெஞ்சத்தோடு…

என் கற்பனையில்
ஓர் விற்பனை…
By…
கவிதைத்காதலன்…
K.RobinMani…
Nallur…

உண்மையாய் காதலியுங்கள்
உயிருள்ளவரை காதலியுங்கள்…
9787978593