Community

இலட்சியகனவு ஒரு இளைஞரின் ஆசை

                       இலட்சியக்கனவு

சூர்யா மற்றும் அவனது அப்பா திவ்யா வை பொண்ணு பாக்க திவ்யா வீட்டிற்க்கு வந்தனர் …இரண்டு குடும்பத்தினரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்…

திவ்யா அப்பா: மாப்ள என்ன வேலை பாக்குறாங்க…
சூர்யா அப்பா: ஆட்டோமொபைல் கம்பெனி ல வொர்க் பன்றான்…

திவ்யா அப்பா: ஒ…செறி செறி… என் பொண்ணு ஆர்‌ஜெ வா இருக்கா சென்னைல… லீவுக்கு வந்துருக்கா …

சூர்யாஅப்பா: தரகர் சொன்னாரு …என் பையனும் சென்னைல தான் வொர்க் பன்றான்…

திவ்யா அம்மா: அப்பும் பிரச்சனை இல்ல …வேலை அங்க ரெண்டு பேருக்கும் இருக்கேல வீடு அங்கயே பாத்துறலாம் போல …(சிரித்துக்கொண்டு)
திவ்யா அவளது அறையில் இருந்து கொண்டு அவளது நண்பி அணுக்கு அழைப்பு செய்தாள் …

திவ்யா அவளுக்கு வாட்சப் இல் அவனது புகைபடத்தை அனுப்பி அவனை பற்றி விசாரிக்க சொல்லி இருக்கிறாள் .விசாரிச்சியா என கேட்கிறாள் …

அணு சூர்யாவின் வீட்டுத் தெருவில் அவனைபற்றி ஒருத்தரிடம் விசாரிக்கிறாள் …அவன் குடித்து விட்டு ஒரு இடத்தில் அமர்ந்து இருக்கிறான் (போதையில்)…

அணு அவனிடம் சூர்யா என்ன வேலை பார்க்கிறார் என்று கேக்க அதற்க்கு
அவன் சொல்கிறான் எங்கன்னு சொல்ல 2 மாதம் ஒரு கம்பெனி ல இருப்பான் 2 மாதம் வேற எங்கயாவது வேலை கிடைச்சிட்டு ன்னு போவான் …
ஒரே கம்பெனி ல லாம் வேலை செய்ய மாட்டான் ம்மா…யார்டயும் அவ்லவா பேச மாட்டான் ,அவன் உண்டு அவன் வேலை உண்டு ன்னு இருப்பான் …

அணு : வீட்டில யார்லாம் இருக்காங்க
அவன்: அம்மா இல்ல அப்பாவும் பையனும் தான் ரொம்ப செல்லமாவே வளர்த்துட்டாரு …
அவள் விசாரித்து விட்டு கிளம்பிட்டா …

அவள் அவனைபற்றி விசாரித்ததை திவ்யாயிடம் சொல்ல அவள் கோபத்துடன் பெற்றோர்கள் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தில் வந்து சூர்யா யிடம் கேட்கிறாள் …

என்ன வொர்க் பன்றீங்க ?
திவ்யா அப்பா : என்னம்மா இது …
திவ்யா : கொஞ்சம் இருங்கப்பா
சூர்யா : ஆட்டோ மொபைல் கம்பெனி ல
திவ்யா எத்தன வருஷமா என கேட்கிறாள் …
திவ்யா வின் அப்பா ஏன் இப்படி கேட்கிறாள் என குளம்பி இருக்கிறார் …
சூர்யா : 3 மாசமா
திவ்யா : இதுக்கு முன்னகூட்டி …
சூர்யா : ஆடிட்டர் ரா இருந்தேன் என சொல்ல
திவ்யா அது எத்தன மாசம் என நக்கலாக கேட்கிறாள் …
சூர்யா : 6 மாசம் என சொல்கிறான் …
திவ்யா : அப்பும் ஒரு வேலை ல உருப்படியா இல்ல …
இப்படி ஒருத்தர் கூட எப்படி லைஃப் புல்லா வாழ முடியும் …
என கோபத்துடன் கேட்கிறாள் …
திவ்யா அப்பா :
இத பத்தி நீங்க சொல்லவே இல்லயே என சூர்யா அப்பாவிடம் கேட்கிறார் …
அவர் என்ன சொல்ல என்று தெரியாமல் அது வந்து என …இழுக்கிறார் …

திவ்யா வின் அப்பா : போதும் வேலை பிடிக்கலன்னு “ஒரு மாசம் அங்க ஒரு மாசம் இங்க” அப்றம் கல்யாணமாவது ஒருத்தி கூட தானா இல்ல என கேட்கிறார் …
சூர்யா : என்ன அங்கிள் இப்படி பேசுறீங்க …
திவ்யா அப்பா : பின்ன எப்படி பேசணும் …தயவு செய்து கெளம்புங்க …என் சொல்லிவிட்டார் …
.
இரவு மொட்டை மாடியில் தனியாக சூர்யா யோசித்து கொண்டிருந்தான் …
அப்போது எதிர்த்த வீட்டில் உள்ள பிரபா அண்ணா அவனிடம்
பேசுகிறார் …
டேய் என்னடா பொண்ணு பாக்க போனியே என்னாச்சி இந்த வாட்டியும் பொண்ணு பிடிக்கலயா …
சூர்யா அமைதியாக தலை குனிந்து ,
பிரபா அண்ணா : எப்படி பிடிக்கும் … இது பத்தாது தடவ எல்லா பொண்ணுங்களும் ஒரே காரணம் தான சொல்லுது …நா தெரியாமத்தான் கேக்குறேன் மெக்கானிக்கல் கம்பெனி ல வேலை பாக்குற அதுலயே எப்படி முன்னேறது ன்னு பாக்காம
நீ என்னடா ண்ணா கம்ப்யூட்டர் சம்பந்தமா ஒவ்வொன்னா கத்துட்டு இருக்க கேட்டா அதுல வேலை கிடைச்சாலும் பேருவ ன்னு சொல்ற …
சூர்யா விர்க்கு என்ன சொல்ல என்று தெரியாம முளித்துக்கொண்டிருந்தான் …

பிரபா அண்ணா : ஒரு கதை சொல்லவா
ஒரு டீ கடைல இரண்டு பேர் வேலை பாக்குறான் ஒருத்தன் டீ கொண்டு போயி குடுப்பான் டீ யும் போடுவான் …
இன்னொருத்தன் டீ மட்டும் தான் போடுவான் .இதுல என்னடான்னா ஒருத்தன் ரெண்டு வேலையையும் பாக்குறவனுக்கு 6000 தான் சம்பளம் …ஒரு வேலைய பாக்குறவனுக்கு 10000 ரூ சம்பளம் …ஏன் தெரியுமா ?

சூர்யா தெரியாமல் யோசிக்க
பிரபா அண்ணா : அவன் ஒரு வேலைய பன்னாலும் பெஸ்ட் டா பன்றான் …புரியுதா
இனிமேலா வது ஒரு வேலை ல இருக்க பாரு
என சொல்லிக்கொண்டு கிளம்பினான் ,.அவன் சொன்னதை யெல்லாம் சூர்யா வின் அப்பா கேட்டுக்கொண்டிருக்கிறார் …
சூர்யா அப்பா சூர்யாவிடம்
என்னடா இன்னும் அதேயே நினைத்துட்டு இருக்கியா
சூர்யா : இல்லப்பா அது வந்து …
சூர்யா வின் அப்பா அவனுக்கு ஆறுதலாக சொல்கிறார் …
நானும் கேட்டு ட்டு தாண்டா இருந்தேன் அவன் சொல்றத …எல்லாரும் அட்வைஸ் பண்ணுராங்கன்னு கவலைப்படாதடா …

அவங்கெல்லாம் அவங்களோட அனுபவத்தை சொல்ராங்க
சில பேர் இவன் மேல வந்துரக்கூடாதுன்னு சொல்லுவாங்க .சிலபேர் இவன் தடுக்கி விழுந்துரக்கூடாது அட்வைஸ் பண்ணுவாங்க வேற வழியே இல்ல காது குடுத்து கேட்டு தான் ஆகணும் …அதுக்காக அவங்க சொன்னதெல்லாம் செய்யனும் ன்னு அவசியம் இல்ல …

ஏன்னா நம்மளோட வாழ்க்கைய அவங்க வாழ போறது இல்ல …
ஒவ்வொருதர்க்கும் கனவு இருக்கு சில பேர் கனவ கனவாவே வச்சிக்கிட்டு அத முயற்சி பண்ணா தோத்துருவோம்ன்னு பயந்துட்டு இருப்பான் ,

ஆனா நீ அப்டி இல்லயே இதுவரைக்கும் 2 படம் அசிஸ்டண்ட் டைரக்டரா வொர்க் பண்ணிருக்க அடுத்த வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் வேற வொர்க் பன்ற மத்தவன் மாதிரி ஊதாரித்தனமா சுத்தலயே …
உன்னோட வொர்க் ல அப்டிதான் இருக்க முடியும் அதுக்காக நீ நிறைய கத்துக்கிடுற அவளவுதான இதுக்குபோய் நீ ஏண்டா பீல் பன்ற
என மகனுக்கு ஆறுதல் கூறினார் …
நீ ஒருநாள் டைரக்டர் ரா வந்து உன்ன பத்தி பேசுனவன் எல்லாம் உன்கிட்ட வந்து ஆட்டோக்ராப் வாங்கும்போது அன்னைக்கு தாண்டா உங்க அப்பா முகத்துல சந்தோசத்த பாப்ப என்று சொன்னார் …(உணர்ச்சிவசப்பட்டு )
அப்பா பேசிக்கொண்டு அவனிடம் தூங்க போ என்று சொல்லிக்கொண்டு அவரும் தூங்க போகின்றனர் …
ஒரு மாதம் கழித்து …
சென்னையில்
இயக்குனரை பார்க்க சூர்யா அலுவலகத்திர்க்கு வந்திருந்தான் …

சூர்யாவிடம் இப்போ எடுக்கிற படத்தை பற்றி அவனிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் …
இயக்குனர்: கதைக்கு ஆர்‌ஜெ ஆஃபிஸ் தேவைப்படுது அதற்காக ஒரு ஆபிஸ் பார்த்து வைத்துருக்கிறேன் அவரிடம் பேசிவிட்டேன் நீ போயி பாத்துட்டுவா அங்க ஸ்னேகா என எச்‌ஆர் மேடம் இருப்பாங்க அவர்களிடம் நான் அனுப்பினேன் என்று முகவரியை குடுத்து போக சொன்னார் …

சூர்யா அந்த அலுவலகத்திர்க்கு போகிறான் …ஸ்னேகா வும் திவ்யா வும் தோழிகள் ஒரு அறையில் பேசிக்கொண்டு இருந்தனர் …
சூர்யா வருகிறான் …திவ்யாவும் சூர்யா வும் அதிற்சி அடைந்தனர் …இவன் எங்க இங்க என்று …

ஸ்னேகா : சொல்லுங்க என்ன விஷ்யம்?
சூர்யா : டைரக்டர் சர் உங்கள மீட் பண்ண சொன்னாங்க
ஸ்னேகா : ஒ படத்துக்கு ஆபிஸ் சூட் பண்ணனும் சொன்னாங்க …எத்தன நாள் இருக்கும் ?
சூர்யா : 2 நாள் மேடம் …
ஸ்னேகா : சரி என்று சொன்னால் …
நாளைக்கு நா இருக்க மாட்டேன் என்னோட ஃப்ரெண்ட் இவா எல்லாமே பாத்துக்குவா என்று திவ்யா வை சொன்னால் …
சூர்யா : நன்றி சொல்லி கிளம்பி விட்டான் …
ஸ்னேகா திவ்யா விடம்
பையன் நல்லா இருக்கான்லாம் …இவங்கெல்லாம் கனவ சுமந்துட்டு வாழ்ரவங்க …அவங்க தன்மானத்தையும் இழந்து அவங்க இலட்சியத்துக்காக போராடுறாங்க …ஒரு படம் 6மாசம் இருக்கும் அதுக்கு அப்றம் அவங்க வேற வேலை யதான் தேடனும் …எப்படிதான் இருக்குராங்கன்னு தெரியல …
ஸ்னேகா சொன்னதை கேட்டு திவ்யா இறக்க மடைக்கிறாள் …
திவ்யா நினைத்துபார்க்கிறாள் … அவள் அவனை திட்டியதை
காயப்படுத்திவிட்டோம் என்று வருந்துகிறாள் …

ஸ்னேகா திவ்யா விடம் நாளைக்கு பாத்துக்கோ என்று சொல்லி கொண்டு கிளம்புகிறாள் …
அடுத்தநாள்

ஆர்‌ஜெ ஆபிஸ் க்கு சூட் பண்ண இயக்குனர் ,உதவி இயக்குனர் ,மற்றும் எல்லோரும் அவரவர் வேலையை செய்து கொண்டு இருந்தனர் …
இயக்குனர் நடிப்பவருக்கு சொல்லி குடுக்க சூர்யாவை சொன்னனர் …

சூர்யா சொல்லி கொடுக்கிறான் ,நடித்து காட்டுகிறான் … அவனது நடிப்பு எல்லோருக்கும் பிடித்து சுற்றிஇருப்பவர்கள் பாராட்டு கின்றனர் …
திவ்யா வும் ஆச்சர்ய பட்டாள் …இவனது நடிப்பை கண்டு ,…
மதியம் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர் சூர்யா வும் ஒரு இடத்தில் உக்கார்ந்து கொண்டு திவ்யா சாப்பிட வருகிறாள் அவனிடம் மன்னிப்பு கேக்க விரும்புகிறாள் …
திவ்யா அவனது எதிரில் சாப்பிட உட்காருகிறாள் சூர்யா எழுந்து போக நினைக்கும்போது திவ்யா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொன்னால் …

திவ்யா சூர்யா விடம் நீங்க இந்த வேலைக்காகதான் எல்லா வேலையையும் விடுரெங்கண்ணு தெரியாம அன்னைக்கு தப்பா பேசிட்டேன் என்று மன்னிப்பு கேட்டாள் …
அதற்கு சூர்யா அதெல்லாம் நா அப்போவே மறந்துட்டேன் என்று சொன்னான் உங்க இடத்துல இருந்து பாக்கும்போது நீங்க பண்ணது நியாயமா தான் தெரிஞ்சது
எல்லா பொண்ணுக்கும் நம்ம வீட்டுக்காரர் நல்ல வேலைல நல்ல சம்பளம் வாங்கணும் தான ஆசை படுவாங்க …அதனால என்ன பிடிக்கலன்னு சொல்லேள கோபம் லாம் வரலங்க …
திவ்யா : எப்படி இப்டி சாதாரணமா எடுத்துகிறீங்க …உங்க இடத்துல வேற யாராவது இருந்தாங்கன்னா “என்னயா பிடிக்கலன்னு சொன்னன்னு ஆசிட் (acid) அடிச்சிருப்பாங்க என் மூஞ்சில …

சூர்யா : சிரித்துக்கொண்டு …அவ்ளோ பயங்கரமா நம்ம பண்ண முடியாது …நமக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு அதவிட்டுட்டு போலீஸ் கோட்டு ஜெயில் ன்னு போனுமா …

திவ்யா : ஓஓ… அப்பும் இந்த வேலை லாம் இல்லன்னா கண்டிப்பா அப்டி பண்ணிருபேங்க அப்டிதான …சரி யான ஆளுதான் என்று விளையாட்டுக்கு சொல்கிறாள் …
சூர்யாவும் சிரித்துக்கொள்கிறான் …இரண்டுபேரும் பேசிக்கொண்டு இருந்தனர் …
திவ்யா : அப்றம் சொல்ல மறந்துட்டேன் உங்க ஆக்டிங் நேச்சுரல் லா இருந்துச்சு …
சூர்யா : தாங்க்ஸ் ங்க …
திவ்யா : ப்ரீ டைம் ல மீட் பண்ணலாம் என்று சொல்லிக்கொண்டு அவளது நம்பரை சூர்யாவிடம் கொடுக்கிறாள் …
சூர்யா அவளிடம் எனக்கு வாங்க போங்க ன்னு கூப்புடுறது ஒரு இதா இருக்கு பெயர் சொல்லி கூப்பிடலாமா என்று கேட்கிறான்

திவ்யா : பாய் சூர்யா
சூர்யா : கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லல …அவள் சொன்னதை கேட்டு நினைத்துபார்க்கிறான் …தனக்குள் பேசிக்கொண்டு பசங்கள விட பொண்ணுங்க பாஸ்டா இருக்காங்க …
இரவு
திவ்யா அவளது தோழி அணுக்கு கால் செய்து பேசுகிறாள்

திவ்யா : ஹலோ
அணு : சொல்லுடி என்ன இந்த நேரத்துல
திவ்யா : நான் இன்னைக்கு அவன பாத்தேண்டி அசிஸ்டெண்ட் டைரக்டர்ரா இருக்கான்டி
அணு : யாரு
திவ்யா :என்ன பொண்ணு பாக்க வந்தான் லா அவன் எங்க ஆபிஸ் ல தான் சூட்டிங் பன்றான் …பேசுனேன் …சாரி கேட்டேன் …அவன் ரொம்ப நல்லவனா தான் இருக்கான் அவனை பற்றி புகழ்ந்து பேசினால் …

அணு அவளது கைபேசியை காதில் வைத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தால்

அவள் தூங்க ஆரம்பித்தது தெரியாமல் மணிக்கணக்கா பேசி கொண்டு இருக்காள் …
திவ்யா : அவன் கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும் தோணுது …இப்போலாம் என்னைய திட்டிக்கிட்டே இருப்பேன்டி அன்னைக்கே பிடிக்குது ன்னு சொல்லிருக்கலாம் ன்னு …
நாளைக்கு ஒரு நாள் தான் இருப்பான் அதுக்குள்ள அவண்ட சொல்லணும் …

சில மணிநேரம் கழித்து கண்முளித்துதுப்பார்க்கிறாள் …
திவ்யா : ஹலோ இருக்கியாடி …
அணு: இன்னுமாடி பேசிட்டு இருக்க
முடிஞ்சா நாளைக்கு அவன்ட லவ்வ சொல்லு இப்போ என்ன ஆள வீடு …காலைல ஆபிஸ் போனும்டி …

திவ்யா : செறி குட்நைட் …
இரவு முழுவதும் அவனைபற்றி நினைத்துக்கொண்டிருந்தாள் …

அடுத்த நாள் காலை

ஆபிஸ் யில் எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர் …சூர்யா எழுதிக்கொண்டு இருக்கிறான் …
சிறிதுநேரம் கழித்து திவ்யாவின் தோழிகள் திவ்யா வை சாப்பிட கூப்பிட்டனர் …பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் …கதவின் கண்ணாடி யில் இருந்து சூர்யா எப்போது சாப்பிட போகிறான் என்று பார்க்கிறாள் …சூர்யா சாப்பிட போகிறான் …
இவளும் போகிறாள் …அவனுக்கு எதிரில் உக்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறாள் …இருவர்களும் பேசிக்கொண்டு இருந்தனர் …
இயக்குனர் சூர்யாவிடம் ஆஃபிஸ் சூட்டிங் இன்னையோட முடிஞ்சிட்டு அடுத்து எப்போ சூட்டிங் வரணும் ன்னு சொல்ட்றேன் எல்லார்கிட்டயும் சொல்லிறு என சூர்யாவிடம் சொன்னார் …
திவ்யாவும் கேட்டுக்கொண்டு இருக்கிறாள் …இன்னைக்கு தான் கடைசி நாள் இதுக்கு அப்றம் இவன பார்க்க முடியாதே என எண்ணிக்கொள்கிறாள் …
இதுக்கு அப்றம் என்ன வேலை பாக்க போற ?
சூர்யா : அதான் யோசிக்கிறேன் …பழைய கம்பெனி க்கு தான் போனும் நினைக்கிறேன் …
சூர்யாவுக்கு அவன் நண்பனிடம் இருந்து அழைப்பு வருது …
டேய் மச்சான் நம்ம கம்பெனி ல பழைய பசங்கள எல்லாரையும் வேலைய விட்டு தூக்கிட்டு இருக்காங்க கம்பெனி இப்போதைக்கு மூடபோறாங்களா ண்டா … அத சொல்றதுக்கு தான்டா கால் பன்னேன் …
திவ்யா : என்னாச்சி
சூர்யா : பழைய வேலை பாத்த கம்பெனிய மூடப்போறாங்களா அதான் ஃப்ரெண்ட் சொன்னான் …

சூர்யா அடுத்து என்ன பண்ணுறதுன்னு யோசித்து கொண்டு இருக்கான் …திவ்யா அவனது பயோடேட்டா வை கேட்கிறாள் …
அதை பார்த்த திவ்யா ஆச்சர்யமடைந்தாள் . .
அதில் டிசைனிங் ஓர்க் ,எலக்டிரிக்கல் சர்வீஸ் ,உதவி இயக்குனர் ,ஆடிட்டர் ,டிரைவர்,மெக்கானிக்கல் ஓர்க் ,ஆர்‌ஜெ …
இப்படி பல சம்மந்தமான வேலைகள் ஒன்றரை வருஷத்தில் பாத்துக்கொண்டு இருந்திருக்கான் …
திவ்யா பாராட்டுகிறாள் …
அதற்க்கு சூர்யா நீ வேற இத கொண்டு போனா கம்பெனி ல காரிதுப்புறான் …
ஒவ்வொரு கம்பெனிலயும் 2மாசம் 3 மாசம் இருந்திருக்க எங்க கம்பெனிலயும் இப்படிதான் இருப்ப ன்னு துரத்திவிட்டுருவாணுக …
திவ்யா அதைக்கேட்டு சிரிக்கிறாள் …
சிறிது நேரமாக இரண்டு பேரும் பேசிக்கொண்டு இருந்தனர் …திவ்யாவை மேனேஜர் அழைக்க மாலை 5மணிக்கு மீட் பண்ணலாம் என்று சூர்யாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி போனால் …

பிரபா அண்ணன் அவர்கள் அம்மாவிடம்
அம்மா எங்க கம்பெனிய மூடப்போராங்களா …எல்லாரையும் வேலைய விட்டு தூக்கிட்டான்க என்று சொன்னான் …வேற வேலைக்கு தான் போனும்
அம்மா: செறி பொறுமையா தேடு …நாலுஇடத்துல சொல்லிவை கிடைக்கும் …வந்து சாப்பிடு என்று ஆறுதல் கூறினார் …

திவ்யா ஆஃபிஸ் முடிந்து வெளியே வருகிறாள் …சூர்யா காத்துக்கொண்டு இருக்கிறான் …பேசிக்கொண்டே நடந்து வருகிறார்கள் …
சூர்யா அப்பாவிடம் இருந்து கால் வருகிறது
எப்படி இருக்க எப்போ ஊருக்கு வார மற்றும் வேலைய பற்றி விசாரித்தார் …சூர்யா அதைப்பற்றி சொன்னான் …அத்ற்கு அப்பா ஆறுதல் சொன்னார் …எதை பற்றி நினைக்காதே என்று …

அப்பா : பக்கத்து ஊர்ல ஒரு பொண்ணு இருக்காம் தரகர் சொன்னாரு பாத்துட்டு வந்துருமா …

சூர்யா :
இதைப்பற்றி பேசியதும் போனை கட் செய்துவிட்டான் …

திவ்யா : யாரு கால் பண்ணா ?
சூர்யா : வேற யாரு அப்பாதான் . நாளைக்கு ஊருக்கு வர சொன்னாரு …பக்கத்து ஊர்ல ஒரு பொண்ணு இருக்காம் பாக்க போனுமா வேற வேலை இல்ல …

திவ்யா : அப்றம் கல்யாணம் பன்ற ஐடியா இல்லயா
சூர்யா : இப்போல்லாம் மாப்ள நல்ல பையனா பாக்குரத விட
அவனுக்கு நல்ல வேலை ,நல்ல சம்பளம் முக்கியமா சொந்த வீடு இருக்கானு தான் பாக்குறாங்க …வாய்ப்பே இல்ல
வாழ்க்கைல கனவ துரத்திட்டு ஓடுறவனுக்கு காதல் கல்யாணம் இருக்கவே கூடாது …

திவ்யா : கல்யாணமும் பண்ணிக்கிட்டு வாழ்க்கைல
சாதிச்சவங்களும் இருக்கதான செய்ராங்க …
சூர்யா : நூத்துல 1% மட்டும் தான் அப்டி இருப்பாங்க …
இங்க எத்தன பேர் சொல்லுவேங்க புருஷனை பாத்து உங்களுக்கு பிடிச்ச வேலைல போங்க நானும் வேலைக்கு போயி குடும்பத்த பாத்துகிறேன் ன்னு …அதுல பாதிபேர் வேலைக்கு போனா தான் வீட்டுல சோறு ன்னு சொல்லுவாங்க …

திவ்யா : ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா
சூர்யா : அவ்லவா இல்ல ஒரு விஷ்யத்துல நம்பிக்கை இருந்துச்சி
திவ்யா : என்ன ?
சூர்யா : 10-ம் நம்பர் ராசின்னு ஜோசியக்காரன் சொன்னான் …அதுல இருந்து எல்லாமே ராசியாத்தான் இருந்துச்சி ரம்மி விளயாடும்போது கூட 10-ம் நம்பர் ஜோக்கர் வந்தா நான்தான் வின் பண்ணுவேன் 10 எனக்கு ராசியா இருந்துச்சி
ஆனா ஒரு விஷ்யத்துல பொய் ன்னு நிருபிச்சிட்டு …
என்ன விஷ்யம் திவ்யா கேக்கிறாள் …
சூர்யா : உண்ண தான் பத்தாவதா பொண்ணு பார்க்க வந்தேன் அதுவரைக்கும் 9 தடவ பொண்ணு பார்த்தத நான்தான் வேண்டாம் ன்னு சொன்னேன் …
அதுல இருந்து ஜோசியத்துல நம்பிக்கையே இல்ல …

சொல்ல வார்த்தை இல்லாமல் அமைதியாக இருந்தால் திவ்யா …
அப்படி நடந்து கொண்டு பஸ்ஸ்டாப் க்கு வந்து விட்டார்கள் …சூர்யாவுக்கு பஸ் வந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு கிளம்பி விட்டான் …

திவ்யா ஆனந்த கண்ணிரூடன் சிரித்துக்கொண்டு இருந்தாள் எனக்காக 9 பேரை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான் என்ற சந்தோசத்தில் …பஸ் வருகிறது அவளும் ஏறுகிறாள் .சந்தோசத்துடன் செல்கிறாள் …

இரவு
சூர்யா அவனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பிகொண்டிருக்கிறான் …
ஆட்டோவில் ஏறுகிறான் …பஸ்ஸ்டண்ட் க்கு வருகிறான் …பஸ்ஸில் ஏறுகிறான் …பஸ் கிளம்பியது …
திவ்யா அவனிடம் எனக்கு உன்ன பிடித்திருக்கிறது சொல்லணும் என்று யோசிக்கிறாள் …அவள் ஆஃபிஸில் 3 நாட்கள் விடுமுறை கேட்கிறாள் …
திவ்யா ஊருக்கும் சூர்யா ஊருக்கும் ஒரு மணிநேரம் மட்டுமே வித்தியாசம் …

ஊருக்கு வந்து இறங்குகிறான் …அப்பாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறான் …

அப்பா : இங்க என்ன வேலை பாக்கலான்னு வச்சிருக்க
சூர்யா : ஆன்லைன் ஜாப் பண்ண ளானு தான் வச்சிருக்கேன்
அப்பா : சூப்பர் டா …உன்னோட லாப்டாப் ரூம் ல தான் இருக்கு ஒதுங்க வச்சிக்கோ …
சூர்யா 4 மணிநேரமா ஆன்லைன் வேலை பாத்துக்கொண்டிருக்கிறான் …
மொபைல் சைலன்ட் டில் போட்டு வேலை பார்க்கிறான்
திவ்யா மூன்று முறை கால் செய்துருக்கிறாள் …அதை பார்த்து கால் செய்து இருக்கிறான் …
திவ்யா : உன்கிட்ட ஒரு முக்கியமான விஷ்யம் பேசணும் நாளைக்கு காலைல ஊருக்கு வந்துருவேன் சாய்ங்காலம் மீட் பன்றோம் .எங்கன்னு எஸ்‌எம்‌எஸ் பன்றேன் …
என்று சொன்னாள் …

மாடியில் இருந்து பேசி கொண்டிருந்த சூர்யா திடீரென்று கீலே பார்க்கிறான் .
பிரபா அண்ணா ஒருவரிடம் கடனாக காசு கேட்டுக்கொண்டிருக்கிறான் அவர் அவரை மதிக்கவில்லை …அதை பார்த்த சூர்யா அண்ணனிடம் வந்து என்னன்ன ஆச்சு அவங்கிட்ட போய் காசு கேட்டு அவமானப்படுர

பிரபா அண்ணா : வேலை பெய்ட்டு சூர்யா .மெக்கானிக்கல் வேலைய தவிர எனக்கு எந்த வேலையும் தெரியாது .
நீ அன்னைக்கு சொன்னது கரெக்ட் தான் டா …நம்ம எந்த வேலை பார்த்தாலும் நிறைய விஷ்யம் கத்து வச்சிக்கிறது தப்பு இல்ல …
சூர்யா : செறி விடுன்னா …1000 ரூபாயை செலவுக்கு வச்சுக்கோ என்று சொன்னான் …
பிரபா அண்ணா : உனக்கு எப்படிடா நீதான் வேலைக்கே போகலயே
சூர்யா : ஆன்லைன் ஜாப் பண்ணி காசு கிடச்சிதுன்னா …
பிரபா அண்ணா : ஓஓ … சூப்பர் டா …தாங்க்ஸ் டா …அன்னைக்கு ஏதாவது நா சொன்னது உன் மனச கஷ்டப்படுத்திருந்தா மன்னிச்சுருடா …

என்று மன்னிப்பு கேட்டான் …

திவ்யா வீடு
திவ்யா அப்பாவிடம் பேசுகிறாள் …
எனக்கு அவனை பிடித்துருக்கிறது என்று
திவ்யா அம்மா : அன்னைக்கு அவன பிடிக்கலன்னு சொன்ன .இன்னைக்கு பிடிச்சிருக்கு ன்னு சொல்ற என்ன விளையாடுரியா ?

திவ்யா : அன்னைக்கு அவன் ஒவ்வொரு வேலையா மாறுறான்னு அவன தப்பா புரிஞ்சிக்கிட்டேன் …
திவ்யா அப்பா : இன்னைக்கு அவன் ஒரே வேலைல இருக்கானா
திவ்யா ; இல்ல … அதுக்கு ஒரு காரணம் இருக்கு ன்னு தெரிஞ்சிக்கிட்டேன் …
நீங்க பார்த்த மாப்பிள்ளை தான போய் பேசுங்க ப்பா பிளீஸ் பா …

திவ்யா அப்பா : எந்த மூஞ்ச வச்சி பேச சொல்ற நா வேற அன்னைக்கு கோபமா வர பேசிட்டேன் …
செறி … நா போய் அவங்க அப்பா கிட்ட பேசி பாக்குறேன் …
திவ்யா சந்தோசமடைகிறாள் …

மாலை திவ்யா கடற்கரையில் காத்துக்கொண்டு இருக்கிறாள் .சூர்யா வருகிறான் …
திவ்யா சூர்யா விடம் உன்ன லவ் பன்றென்னு சொல்லிவிட்டாள் …
சூர்யா என்ன சொல்வதென்று தெரியாத நிலையில் இருக்கிறான் …
திவ்யா : நீ ஏன்ட பேசுற விதம் பழகுற விதம் ,நீ எதுக்காக இவ்ளோ கஷ்டப்படுற எல்லாத்தியும் பார்த்து எனக்கு உன் மேல ஆசை வந்துட்டு …

நீ என்ன பொண்ணு பாக்க வந்த அன்னைக்கே நா உன்ன பிடிச்சிருக்கு ன்னு சொல்லிருக்கலாம் ன்னு எப்போதும் என்ன திட்டிக்கிட்டே இருப்பேன் …

நீ என்ன ஆகணுமோ அதுலயே போடா …நா உனக்கு சப்போர்ட் டா உன் கூடவே இருப்பேன் …
நீ அன்னைக்கு சொன்னேல்லா லவ் லயும் ஜெச்சி லைஃப் லயும் ஜெச்சவங்க நூத்துல 1% தான் இருப்பாங்க ன்னு … நாமளும் அதுல இருக்கலாம் டா …

இத்தன நாள் வரைக்கும் என்ன லவ் பண்ணனும்ன்னு தோனலயா உனக்கு சொல்லு ?

சூர்யா : தோணுச்சி … உன்ன முதல் முதல்ல ஒரு கோயில் ல பார்த்தேன் …உன் பிறந்தநாள் அன்னைக்கு அங்க இருக்கிற வயசானவங்களுக்கு சாப்பாடு வாங்கி குடுத்துட்டு இருந்த …
எல்லாரும் அவங்களோட பிறந்தநாள் க்கு பிரண்ட்ஸ் ,ட்ரீட் ன்னு செலவு பன்ற காச நீ இந்த மாதிரி ஒருதங்களுக்கு செலவு பன்ற எண்ணம் பிடுச்சிருந்துச்சி …

எனக்கு கல்யாணம் பன்னிக்க விருப்பமே இல்ல …அப்பா உன்னோட போட்டோ காட்டுனாங்க அதனாலதான் பார்க்க வந்தேன் …

அப்றம் தான் தோணுச்சி நமக்கு பிடிச்ச விஷ்யம் எதுவுமே நமக்கு சீக்கிரம் கிடச்சா சந்தோஷம் இருக்காதுன்னு …

திவ்யா அழுதுகொண்டு அவன் தோலில் சாய்கிறாள் …

சூர்யா அப்பாவிடம் திவ்யா அப்பா மன்னிப்பு கேக்க வந்திருக்கிறார்கள் வீட்டிற்க்கு …
திவ்யா அப்பா : அன்னைக்கு உங்கள பத்தி பேசுனத மனசுல வச்சிக்காதீங்க …
சூர்யா அப்பா ; அதெல்லாம் இப்போ எதுக்கு …ஏன் மேலயும் தப்பு இருக்கு நா அத சொல்லிருக்கணும் என்று
இப்போ எதுக்கு அத பத்தி …

திவ்யா அம்மா : நான் சொல்ரெங்க …உங்க பையன் திவ்யா ஆஃபிஸ் க்கு சூட்டிங் பெய்ருக்கான் …அங்க ரெண்டு பேரும் பழகி பேசிருக்காங்க … அவளுக்கு உங்க பையன பிடிச்சிருக்கு என்று சொன்னாள் …

சூர்யா அப்பா : அவன் இத பத்தி ஏன்ட ஓன்னுமே சொல்லலயே …
திவ்யா அப்பா : அவளே இன்னைக்கு தான் அவங்கிட்ட பிடிச்சிருக்குன்ன்னு சொல்ல போறா …உங்களுக்கு சம்மதமா …

சூர்யா அப்பா : அவங்க ரெண்டு பேருக்கு பிடிச்சுதுன்னா நடுவுல எதுக்கு நா இருக்க போறேன் …எப்படியோ அவனுக்கு கல்யாணம் ஆனா சரி …

சூர்யா திவ்யா விடம் எங்க அப்பா ஒத்துக்கணுமே …
திவ்யா : பாஸ் … அதெல்லாம் நாங்க பாத்துகிறோம் …

சூர்யா வுக்கு கால் வருது அவன் அப்பாவிடம் இருந்து …
சூர்யா அப்பா : என்னடா லவ் வந்துச்ன்னு சொல்லவே இல்ல …
சூர்யா : அப்பா அது வந்து …
சூர்யா அப்பா : செறி செறி …எப்படியோ கல்யாணம் பண்ணி பேரன குடுத்துரு என்னம்மா மருமகளே …

திவ்யா ; செறி மாமா …

திவ்யா அப்பா : மாப்ள என்ன மன்னிச்சிருங்க அன்னைக்கு பேசுனது …
சூர்யா : அதெல்லாம் எப்போவோ மறந்துட்டேன் மாமா
சூர்யா அப்பா : செறி ரெண்டு பேரும் நேரத்தோட வீட்டுக்கு வந்து சேருங்க …
சூர்யா : செரிப்பா …
பேசிக்கொண்டு முடித்தனர் …
திவ்யா சூர்யா விடம்
ஒரு குட்நியூஸ் உனக்கு அடுத்த படம் கிடைக்கிற வரைக்கும் என்னோட ஆஃபிஸ் ல டெம்பரரி (temporary) ஆர்‌ஜெ வா ஜாயின் பண்ணு …
சூர்யா : ஆர்‌ஜெ யா …
திவ்யா : ஆமா … அப்பும்தான் உன்கூட ஒரே ஆஃபிஸ் ல ஒரே வீட்டுல சந்தோஷமா உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம் …
சூர்யா : ஆர்‌ஜெ சூர்யா வா ரெடி ஆகலானு சொல்ர …
திவ்யா : ம்ம் …
சூர்யா : இறங்கி யாச்சு ரெண்டு ல ஒண்ணு பாப்பும் …(கண்ணாடியை மாட்டிக்கொண்டு) …

கடைசியில் சூர்யா வுக்கு 10-வது நம்பர் ராசியாக அமைந்தது …

                           ******HAPPY END********   
                                                                                          WRITTEN BY   {SK}
2 Likes

Innum payirchi thevai…