Community

என் முதல் தேவதை “அம்மா”

என் முதல் தேவதை “அம்மா”

கோடிக்கணக்கான
நஷத்திரங்கள் இருக்கும்
கருப்பு மாளிகையில் !
நிலா தோன்றுவதை போல்
தன் இருட்டு அறையில் சேய் தோன்றி !
அவள் சேய் செய்கின்ற சேட்டைகளை பொறுத்துக்கொண்டு !
சிப்பிக்குள் இருக்கும் முத்துப்போல் !
சேய் இவ்வுலகில் மலர்ந்து !
தேனைப் போன்ற தன் இனிய குரலால் அழுகையின் மலைச்சாரலில் அழைத்து !
அவளின் இதயம் மகிழ்ச்சியின் மழையால் நனைந்து !புன்னகை பூத்து !
தன் பிறப்பு முதல் இறப்பு வரை
அன்பால் அரவணைத்து!
தன் கனவுகளை கலைத்து !
சேயின் கனவுகளுக்காக உழைக்கும்
அவள் என்கின்ற மூன்றெழுத்து
'அம்மா ’
வண்ணங்கள் பூசாத தேவதைகளே!-இந்து😍

Mail I’d : indusathya18@gmail.com

1 Like