Community

கல்வியே மனிதனை உயர்த்தும்!

பாண்டி இவர் ஒரு ஆசிரியர், மேளகாரர் கோபாலுக்கும் ஆடு மேய்க்கும் சிவகாமிக்கும் மகனாய் பிறந்தவர்.தீண்டாமை கொடுமை அதிகம் உள்ள மதுரை அருகே உள்ள கிராமம் அது.ஆசிரியர் பாண்டி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் இவர் ஆசிரியர் ஆவதற்கு முன்பு இவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம் இவர் சார்ந்த சமூக மக்கள் ஊர்த்தெரு வழியாய் செல்லும் பொழுது சைக்கிளோ, மோட்டார் சைக்கிளிலோ சென்றால் வண்டியை விட்டு இறங்கி வண்டியை உருட்டித்தான் செல்லவேண்டும் பொது குழாயில் தண்ணிர் பிடிக்க அனுமதி இல்லை அப்படிப்பட்ட துன்பத்திற்கு ஆளானவர், ஊர்த்தெருவில் சட்டை பேண்ட் இன் பண்ணி சென்றார் என்பதற்க்காக அங்குள்ள சாதிவெறியர்களால் தாக்கப்பட்டவர், அரசின் உதவித்தொகையால் தனது ஆசிரியர் படிப்பை படிக்கிறார் படித்து முடித்து அரசின் ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்விலும் வெற்றி பெறுகிறார் ஊரின் அருகில் உள்ள பள்ளியில் பணியமர்த்தப்படுகிறார்.அவரின் சொந்த ஊருக்கும் சேர்த்து அதுதான் பள்ளி.இவரோ ஆங்கில ஆசிரியர் யார் இவர்களை ஏளனம் செய்து அவனனபடுத்தினார்களோ அவர்களின் குழந்தைகளுக்கும் இவர் தான் ஆசிரியர்.பெற்றோர் மாணவர் சங்கத்தின் கூட்டம் நடைபெறுகிறது மாணவர்கள் தங்களது பெற்றோரை அழைத்து வர வேண்டும் அணைத்து மாணவர்களும் தனது பெற்றோரை அழைத்து வந்திருந்தனர் இவரை சொந்த ஊரில் ஏளனம் செய்து அவமானப்படுத்தியவர்களும் வந்திருந்தனர் ஆசிரியரை கண்டு குனிக்குறுகிறன்றனர் அவர்களின் பிள்ளைகளை தேர்ச்சி விகிதம் தொடர்பாக ஆசிரியர் பாண்டியை சந்தித்து சார் என்று அழைத்தே கேட்டறிகின்றனர் ஆசிரியரும் முகமலர்ச்சியுடன் பதில் அளிக்கிறார்.ஆசிரியர் ஊரின் முக்கிய பிரமுகராக உருவெடுக்கிறார் ஊரின் வாக்குச்சாவடி வாக்காளர் அட்டை பெயர் சேர்க்கும், நீக்கும் பணிக்கான அலுவலராக நியமிக்கப்படுகிறார் சொந்த ஊருக்கும் சேர்த்தே அவர் தான் அலுவலர் ஆசிரியர் பணியினை பெற்றவுடன் அவரின் வாழ்க்கை தரம் உயருகிறது மரியாதையும் கூடுகிறது அவமானப்பட்ட இடத்திலேயே சார் என்ற மரியாதையும் பெறுகிறார்.மேளகாரரின் மகன் என்ற பெயர் நீங்கி ஆசிரியரின் அப்பா என்ற சமூக அந்தஸ்த்தை அந்த குடும்பமும் பெறுகிறது,இதன் மூலம் கல்வியே மனிதனை உயர்த்தும் ஆயுதம் என்பது உணர்த்தப்படுகிறது.

2 Likes

Adhil endra sol missing… mudivu katturai Pol ulladhu…sila idathil sila sorkal missing… vaazhthukal