Community

இயற்க்கை அன்னை

நம் பூமி…
இயற்கை அன்னை நமக்கு இலவசமாக எழுதிக்கொடுத்த இருப்பிட வசதி…
தங்கத்தையும்,வைரத்தையும் தன்னுள்ளே புதைத்து வைத்து உருளுகின்ற ஓர் ஆன்மா…
நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு இந்த ஐம்புலன்களையும் அசுத்தமாக்கிக்கொண்டிருக்கும் ஓ மனிதா…
சுத்துகின்ற பூமி சுற்றாமல் நின்றால்…?
தலை சுத்த வில்லையா உனக்கு…?
ஆலைக் கழிவுகளால்"ஆற்று நீரை அசுத்தப்படுத்தினாய்…இதனால் பெயர் தெரியா நோய்க்கெல்லாம் உன் முகவரி கொடுத்தய்…
வாகனப்புகையால் வாயுபகவானை வம்புக்கிழுத்தால்…நட்டம் காற்றுக்கல்ல…மாறாக தண்ணீர் பாக்கட்டுகளைப்போல் காற்றுப் பைகளும் கடைகளுக்கு வந்துவிடுமே…
காட்டை அழித்து அங்கு கட்டிடம் நட்டால்…
மனிதா உனக்கரு எச்சரிக்கை…இனி உலகை அழிக்க உலகப்போர் தேவையில்லை…
அறிவியல் வளர்ச்சியின் அனுகுண்டும் தேவையில்லை…மழை நின்று மானுடம் அழியும்…
செழிப்பான விளைச்சளுக்கு செயற்கை உரம் என்று சொல்லி சொல்லி விற்பதை சோதனையிட்டுப் பார்த்தால் எருமை வாகனத்தில் எமன்கூட திரிவானே…
இதைவிடுத்து இயற்கை வாழ்வியலுக்கு திரும்புவதே "பூமித்தாய்க்கு பொட்டு வைத்து பூவைத்து புனிதப்பாடுத்தும்"மந்திரம்…

கவிதை வழி முயற்ச்சி…வெற்றி வேட்கையுடன்-அ.அந்நோணி ஜீசஸ் 9629541897