Community

இனியவளே என் தோழி

என் வாழ்வில் பூவேன வந்தவளே
வசந்த காலமாய் அன்பை பொழிபவளே
உன் நட்பில் அழிவில்லா இன்பம்
கண்டேனடி…!
பவுர்ணமி நிலவாய் உன் முகம் மலர
பூந் தோட்டமும் தோற்றதடி…!
மனக்கவலை போக்கும் மருந்தாய் உன் மந்திர பேச்சிலும்
மலர்களை போல இன்பம் மலரும் உன் மெல்லிய சிரிப்பிலும் கவலை மறந்தேனடி
துன்பங்களில் தூணாகவும்
வெற்றிகளில் படிக்கட்டாகவும் வாழ்பவளே
கண் சிமிட்டும் கல்லூரி வாழ்க்கையில்
கடைசி வரை கிடைத்த பரிசு நீயடி
உன் செல்ல சண்டைகளும் கோடி அழகடி
தினம் சண்டையிட மனம் ஏங்குதடி
தினம் ஆயிரம் பொய் சொல்வேன் நான்
உன்னிடம் கூற மறுக்குதடி மனம்
சின்ன சண்டைகளில் ஆயிரம் புரிதலுடன்
நட்பாய் தொடருவோம் நாம்…!

1 Like