Community

ஒரு வண்டிடம், மலரின் காதல் விண்ணப்பம்

"கருமையும் வெண்மையும் இணைந்தால் தான் அழகு என்று உணர்ந்தேன்
உன் கண்களைப் பார்த்த பிறகு
இனிமையும் செம்மையும் கலந்தால் தான் அழகு என்று உணர்ந்தேன்
உன் மொழியைக் கேட்ட பிறகு,
உன் ஒவ்வொரு புதிர் பார்வையையும் புரிந்து கொள்ளிட
என் ஆறு அறிவு அறியவில்லையே,
உன் ஒவ்வொரு புன்னகையையும் வர்ணித்து கூறிட
என் மொத்த குரல் போதவில்லையே
இப்படி இரு இமைகளையும் கட்டி போட்டு என் நெஞ்சை மெழுகுவர்த்தியாய் உருக வைத்தது ஏனோ?
என்று எண்ணிக் கொண்டே இருந்தேன் … ஆனால் இறுதியில் செல்லும் நாட்களை
எண்ணிப் பார்த்திட கூட
என் பத்து விரல் பத்தவில்லையே
(பூவின் பூவிதழ்கள் , அதன் விரல் போல்)

மறுவார்த்தை பேசாமல் மறுகணமே என்னை மலர வைத்தது நீயோ? "
என்று காதல் விண்ணப்பம் அளித்தது மலர் வண்டிடம்.
" மந்திரம் ஏதும் கூறாமல் என்னை உன் வசம் மயக்கியது உன் வாசமோ? "
என்று கூறி மலரின் விண்ணப்பத்தை ஏற்று , மலருடன் இணைந்தது வண்டு.

4 Likes