Community

மனிதநேயத்தை தேடிய பயணம் இது

கருவறையை கல்லறையாக்கி கள்ளிப்பால் விட்ட கல்நெஞ்ச சமூகத்தில் அன்றே கறைந்துவிட்டது மனிதநேயம்.

நம் நூற்றாண்டையே தலைகுனிந்து அடிமையாக்கிய கைபேசியின் அனுகூலம் கஷ்டத்தில் இருப்போரை மீட்டெடுக்க மறுத்து புகைப்படம் பிடித்து சமூகத்தில் “லைக்ஸ்” வாங்குவதை நோக்கியே செல்கிறது மனிதமும் மனித நேயமும்…!?

பெண்மை போற்றப்பட்டு,
பாலியல் தொல்லைகளற்று, பிஞ்சுகளை நஞ்சில்லாமல் கொஞ்சி, சுத்தத்தில் உச்சம் பெற்றது இந்த சமூகம்…
#பொய்கள் இத்தனை அழகானதா?
.
.
அழகான பொய்களில் தலைகுனிந்து நிற்கிறது மனிதநேயம்.

விண்ணை வெற்றி கொள்ளும் முனைப்பில்,
மண்ணை இழந்து, கட்டடங்களின் உயரத்தில் சரிந்த விவசாயத்தின் அருமையை…,
மறந்த மனிதனே!! விவசாயிகளை மதிக்கவும் மறந்த மனிதநேயமே!!!
எங்கே மறைந்துள்ளாய்??

கல்வி வியாபாரமாய் மாறி,
நிதி நீதியாக நிந்தித்து மூழ்குவதை ஆதரிக்கும் அதிகாரிகளின் மனித நேயமும் சாய்ந்துவிட்டது…

மனிதமற்ற மிருகமாய் மாறி,
மனித நேயத்தை மறந்து விடாதே!! “மனிதன் மகத்தானவன்” மரணிக்க அனுமதிக்காதே_மகத்துவத்தை…
மறந்து விடாதே__ மனிதநேயத்தை.