Community

திருநங்கை - சகாப்தம்

பிறக்கும்போது கொண்டாடப்படும் பிள்ளையடி நீ…
வளரும்போது சாந்தோஷம் தரும் வாழ்க்கையடி நீ…
உணர்வுகள் மாறுபடும்போது மட்டும் உதாசீனப்படுத்தும் ஜென்மமாம் நீ…
நாணம் கொள்ளும்போது நாகரீகம் தெரியாதவளாம் நீ…
சட்டையிலிருந்து ரவிக்கைக்கு மாறியதால் சகிக்க முடியாதவளாம் நீ…

பாவம் அம்மூடர்கள்…அவர்களுக்கு புரிவதில்லை…

ஆணாய் பிறந்து பெண்ணாய் வாழும் அத்துனையும் நீயடி…
இரு பாலினம் பற்றியும் முழுதும் அறிந்த அற்புதமும் நீயடி…
அவளும் நானாய் அவனும் நானாய்
அகிலமும் நானாய்…

  • கலை