Community

பயங்கரவாதம் - பாவம்

சிதறி கிடக்கும் குருதி துளிகள் என்ன குற்றம் செய்தது…
செத்து மடியும் மானுடனின் உடல் என்ன ஊறு செய்தது…
கதறித் துடிக்கும் பச்சிழங்குழந்தைகள் என்ன பாவம் செய்தன…
உன் சாதியுன்னை சகோதரனாய் வாழ சொல்கிறதே தவிர சதிகாரனாய் அல்ல…சாதிகள் அனைத்தும் சமம்…
உன் மதமுன்னை மனிதனாய் வாழ சொல்கிறதே தவிர மிருகமாய் அல்ல…மதங்கள் அனைத்தும் மகத்துவம்…
உன் இனமுன்னை இணைந்து வாழ சொல்கிறதே தவிர பிறரை இகழ்ந்து வாழ அல்ல…இனங்கள் அனைத்தும் இணைதல் வேண்டும்…
சாதிக்கொரு தனிக் குருதி ஓடவில்லை மனிதா…
உன் உடலை மண் பருகும் போதும் சாதி பார்ப்பாயோ…??
தீவிரவாதம் தவறில்லை பயங்கரவாதத்தின் முன்…

  • கலை