Community

யாருக்கும் பொறுமை இருப்பதில்லை

My name is Rajeev I am from velachery.I was born in April 8th 1994.I just finished my school and college in Chennai.i love playing game. I love reading books especially Tamil books and I like writing.

திரும்ப திரும்ப மனசுக்குள்ள சொல்லிகிட்டே வனாந்திர ரோட்டில் ஒரு ஓட்டை TVS வண்டியில் ராஜீவ் எங்கையோ போய்கொண்டிருந்தான். ஸ்டைலாக சீவிய முடி புது சட்டை பேன்ட் அதற்க்கு மேட்சாக ஷூ ஆனால் வண்டிக்கும் இவனுக்கு சம்மந்தம் இல்லை.அந்த ரோடு மிக நீளமாக கண்ணுக்கெட்டிய தூரம் யாரையும் காணவில்லை அவ்வளவு வெறுமையா இருந்துச்சு ஒரு மரம் இல்ல, கொஞ்சம் கூட நிழல் இல்ல, அதுதான் ரொம்ப முக்கியம் நாமதான் எல்லா மரத்தையும் வெட்டி காசுக்கு வித்தாச்சு.

திடீர்னு வண்டி நடு ரோடுல நின்னுச்சு ராஜீவ்க்கு,என்ன ஆச்சுன்னு தெரியல.சுற்றிமுற்றி பார்க்கிறான் ஒருவரும் அங்கில்லை.ராஜீவ் வண்டியை உதைத்து உதைத்து பார்க்கிறான் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்ன செய்வதென்று தெரியாமல் நடு ரோட்டில் திரு திருவென்று நின்றுகொண்டிருந்தான்.

சுட்டெரிக்கும் வெயிலில் அவன் முகம் உடம்பெல்லாம் வியர்த்து கொட்ட அவன் அந்த வெறிச்சோடிய ரோட்டை பார்த்துக்கொண்டிருந்தான் சட்டென்று ஒரு யோசனை வர வண்டியின் பெட்ரோல் டேங்க்யை திறந்து பார்த்தான். அதில் துளிகூட பெட்ரோல் இல்லை.அந்த நொடி அவன் அப்பா மீது பயங்கர கோவம். அவன் இப்படி நடு ரோட்டில் நிற்க அவன் அப்பாவும் ஒரு காரணம்.அவனுக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் அவன் அக்கா கல்யாணத்திலும் அக்கா கணவருக்கு தொழில் தொடங்கியும் அவர் அழிந்து போனார். அதனாலையே அவன் அப்பா மீது கோவம் இதில் வண்டியில் வேற பெட்ரோல் இல்ல கோவம் தலைக்கேறியது.

அவன் அப்பாவை " யோவ் நான் உனக்கு புள்ளையா பிறந்ததை தவிர வேற என்ன பாவம் பண்ணினேன்! எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது " என்று நடுரோட்டில் உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்தான்.என்ன செய்வதென்று தெரியாமல் வண்டியை தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்த அவனுக்கு உதவிக்கு கூட அங்கு யாரும் இல்லை அந்த வனாந்திர ரோட்டில் வெகு நேரம் நடந்த பிறகு தூரத்தில் ஒரு வண்டி வருவது இவனுக்கு மங்கலாக தெரிந்தது அந்த வண்டி கிட்ட வர வர ராஜீவ் கையை நீட்டி லிஃப்ட் கேட்டான் அவன் ராஜீவை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான்.ராஜீவிற்க்கு‌ ஏமாற்றம்‌, தொண்டை வறண்டு நடை தளர்ந்து வண்டியை தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டு சென்றான்.

இரண்டு மூன்று வண்டிகள் இவனை கடந்து சென்றது இவன் கை காட்டியும் நிற்கவில்லை இப்போது இவன் அப்பா மீது இருந்த கோவம் போய் வண்டியை நிறுத்தாமல் போனவர்கள் மேல் கோவம் வந்தது. முகமெல்லாம் வியர்த்து வழிந்தது சட்டை முழுவதும் நனைந்து குளித்துவிட்டு துவட்டாமல் வந்தவன்போல நடுரோட்டில் நின்றான்.வண்டியை வெகுதூரம் தள்ளிக்கொண்டு போனவனுக்கு ஒரு கட்டத்தில் வண்டியை தள்ள முடியாமல் வண்டியை நிறுத்தி அதன்மேல் உட்கார்ந்தான். சிறிது நேர ஓய்விற்கு பிறகு வண்டியை தள்ளிக்கொண்டு போக ஆயத்தமானான்.

அப்போது ஒரு இளைஞன் சைக்கிளில் வேகமாக ராஜீவை பார்த்துக்கொண்டே கடந்து சென்றான் இவனுக்கு மனசுக்குள்ள “பேசாம நாமளும் ஒரு சைக்கிள் வாங்கிருந்த இந்த பிரச்சினை வந்திருக்காது” என்று நினைத்துகொண்டு கொஞ்ச தூரம் வண்டியை தள்ளிக்கொண்டு போக இவன் கண்களில் பட்டது ஒரு போஸ்டர் அதில் இருந்த வாசகம் " **வாழ்க்கையில் அனைவருக்கும் இரண்டு கேள்விகள் உண்டு! ஒன்று வாழ்க்கை இப்படியே போய்விடுமோ? இரண்டு வாழ்க்கை இப்படியே போய்விடக்கூடாதா?"

ராஜீவிற்க்கு மூன்றாவதாக ஒரு விஷயம் தோன்றியது இந்த இரண்டும் எந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை பொறுத்து தான். இப்போது இருக்கும் சூழலை நினைத்துகொண்டு அந்த போஸ்டரை கடந்து சென்றான்.சிறிது தூரம் போனதும் ஒரு வண்டி இவனை கடந்து கொஞ்ச தூரத்தில்போய்‌ நின்றது அந்த வண்டி பார்ப்பதற்கு வெளிநாட்டு வண்டி போல இருந்தது 2லட்சம் இருக்கும்.நாம எப்போ இது மாதிரி வண்டி வாங்குறது என்று மனசுக்குள்ள நினைத்துக்கொண்டு அவன் அருகில் சென்றான் ராஜீவ் வண்டியை நிறுத்திவிட்டு ஓரமாய் நின்றவன் அவசரமாய் சிறுநீர் போய்கொண்டிருந்தான் அப்போது அவனுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது " இரு டி பக்கத்துல தான் இருக்கேன் சீக்கிரம் வந்துடுவேன் ரொம்ப பசிக்கிறது எதாவது நல்லா செஞ்சு வை " பேசிக்கொண்டே திரும்பி பார்க்க ராஜீவ் பின்னால் நிற்பதை பார்த்து ஒரு நொடி திடுக்கிட்டு போனவன் சுதாரித்துக்கொண்டு தன் பேண்ட் ஜிப்பை வேகமாக மூடிவிட்டு என்னவென்று ராஜீவிடம் கேட்டான்.

ராஜீவ் நடந்ததை கூறி பெட்ரோல் பங்க் வரை தனக்கு லிஃப்ட் வேண்டுமென்று மிகவும் பரிதாபமாக கேட்டேன் .அவனும் ராஜீவ் இருக்கும் நிலையை பார்த்து சரி என்று பெட்ரோல் பங்க் நோக்கி புறப்பட்டார்கள் ராஜீவிற்க்கு இப்போது சந்தோசம் தான். போகவேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு சென்றுவிடுவேன் நினைத்தது எல்லாம் நடந்துவிடும் வாழ்க்கை மாறிவிடும் நல்லா இருக்கலாமென்று மனதிற்குள் சந்தோஷம். பெட்ரோல் பங்க் வந்தது, ராஜீவ் லிஃப்ட் குடுத்தவனுக்கு நன்றி சொல்லிவிட்டு பெட்ரோல் பங்க்கிற்குள் வண்டியை தள்ளிக்கொண்டு போனான்.

பெட்ரோல் போட்டுகொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பியவனை பார்த்துக்கொண்டே இருந்தான், லிஃப்ட் கொடுத்தவன். அவன் தூரம் செல்வதை பார்த்துவிட்டு வந்த வழியே திரும்பி சென்றான் ஏனென்றால் ‌இவன் போகவேண்டிய வழி தாண்டி ராஜீவிற்க்கு லிஃப்ட் கொடுத்தான் ,காரணம் ராஜீவின் மீது வந்த இறக்கம் ராஜீவ் உதவி கேட்ட விதம்…ராஜீவிற்க்கும் உதவி கிடைத்தது இவனுக்கு மனம் நிறைவுற்றது…

இங்கு உதவி கிடைக்கும் வரை யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. பொறுமை கடலினும் பெரியது…

4 Likes

Kadhai romba description ah irukku… instructions niraiya irukku… kadhai pesa vendum… vaazhthukal

1 Like

Thank you so much :heart:

1 Like

Welcome :heart_eyes:

1 Like