Community

எச்சில் பூக்கள்

“எச்சில் பூக்கள்”

கண்விழித்ததும்
ஒருதரம்…,
அடம்பிடித்த
காலை உணவுக்குப் பின்
ஒருதரம்…,
பள்ளிப் பேருந்தில்
கால் வைக்கும் முன்
ஒரு தரம்…
மதியமெல்லாம்
அவள் நினைவாய்…
காத்திருக்க…
மாலையிலே
எனைக் கண்டு
மகிழ்வாய்ஓடி வந்து
கட்டி அணைத்து
ஒருதரம்…
இப்படித்தான்
நித்தம் பூக்கும்
என் கன்னத்தில்
என் மகளின்,
முத்தம் என்னும்
“எச்சில் பூக்கள்…”.!:tulip:

பாபுமாதவன்🌷