Community

மனிதவாழ்வின் கேள்விக்குறி

வித விதமாய் பலவகை ஒரு பக்கம்,
மூவேளை கிட்டாத அவல துக்கம்!
படைத்தவன் பட்டினியில் மிதக்கும் சோகம்,
பிணம்தின்னும் காலம-இல்லை வெகுதூரம்!

பணமுள்ளவன் ஆளுகின்றான்,
இயலாதவன் இயந்திரமாய் மாறுகின்றான்.
கண்கட்டிய குதிரைப்போலே,
மனிதனும் இப்பூவுலகில் ஓடுகின்றான்!

அன்பெங்கே? பண்பெங்கே?
குணமெங்கே ? மனமெங்கே ?
காலம் போனது!

பொன்னெங்கே? பொருளெங்கே?
மதுயெங்கே? மாதுயெங்கே?
கலிகாலம் பிறந்தது!

கருணையில்லா இவ்வுலகிலே,
தற்பெருமை ஏனடா?
பொதுநலமில்லா மேடையிலே
மனித நாடகம்தான் ஏதடா ?