Community

வறுமைக்கோட்டு வாழ்க்கை

ஓட்டு வீடு எனும்
ஓட்டை வீட்டு ராஜாக்கள் நாங்கள்
வீதியில் மட்டுமல்ல
வீட்டிற்குள்ளும் குடை பிடிக்க வேண்டும் மழை பெய்தால்.
கார வீடு கனவிலே
எங்கள் கால்சந்ததி கழிந்து விட்டது…
கானல் நீராய் தான்
இன்னும் தொடர்கிறது எங்கள் கனவுகள்
ரேசன் அரிசி
அதில்தான் கழிகிறது எங்கள் வாழ்வின்
முக்கால்வாசி போர்ஷன்…
வருடத்திற்கு ஓரிரு முறை புதுத்துணி
வறுமையால் அதைத்தான் விரும்புகிறது
எங்கள் மேனி…
அன்றாடங்காய்ச்சியாய் இருந்தாலும்
ஆனந்தமாய் தான் வாழ்கிறோம்
அழுக்கு சட்டையோடும்
அழகாய் தான் திரிகிறோம்.
பணத்தால் இல்லை மகிழ்ச்சி
பழகும் பழக்கத்திலும் பாசத்திலும்தான் உள்ளது உண்மையான மகிழ்ச்சி
ஏழை என தாழ்ந்து வாழாதே…
ஏற்றம் வர புது மாற்றம் பெற
முயற்சித்து கொண்டே இரு
முன்னேற்றம் வரும் வரை…

By…
கவிதைக் காதலன்
K.ROBIN MANI
NALLUR…
9787978593