Community

ரொட்டித்துண்டு ஒன்றுதந்து

ரொட்டித்துண்டு ஒன்றுதந்து

பச்சிளம் குழந்தையை பாருங்க
பசிக்கு அழுகுது தானுங்க
எச்சி தேநீரை எண்ணியே
ஏங்கி நிற்பதை பாருங்க

பசியை படைத்தவன் யாருங்க
அவனை பட்டினி போடவேணுமுங்க
கோவிலுக்கு பலபிக்ஷேகம் ஏனுங்க
குழந்தை பசியை தீர்க்கப்பாருங்க

நலிவுற்று போன தேகமுங்க
பொலிவற்று போன வாழ்கையுங்க
கண்ணீரை வரவழைக்கும் காட்சிங்க - அதை
கண்டும் காணாமலும் செல்பவர்களுக்கு
மாண்டு போச்சி மனசாட்சிங்க

வலியும் வேதனையும் தானுங்க
கண்ணீர் குளமாய் மாறிப்போனதுங்க
கொட்டி கொடுக்க யாரும்வேண்ங்க - இவர்களை
கண்டால் ரொட்டித்துண்டு ஒன்றுதந்து சொல்லுங்க

ஜீவா நாராயணன்