Community

விடியல் உண்டோ இவள் கதறலுக்கு?

சிற்றெருன்பு சீரினும் சிணுங்கிடும் சிறுப்பிள்ளையை
காமக்கொடூரனின் பிடியில் உயிரை விழுங்கிடும் வலியினால் சிதைக்கப்பட்டு வாழ்வே சீரழியும் நிலை அவளுக்கு ஏன் :rage:?

அவள் உடுத்தும் ஆடைகளிலா ?
இல்லை காமக்கொடூரனின் கேடுகெட்ட கண்களிலா ?
மூடனே மூன்று வயது பிஞ்சு நெஞ்சில் எவற்றை கண்டாய் :mask::expressionless:?

மாதவிடாய் வார்த்தைக்கு பொருள் அறியும் முன்னே உதிரலாற்றில் தன் உயிரை துறக்க வேண்டும் என்று
அவளுக்கு என்ன​ சாபமா ???

ஓடி விளையாடும்​ வயதில்
ஒளிந்து மறைந்து
கூனி குறுகி வாழும் வாழ்க்கை ஏன்🤧 ?

அம்மிருகத்தின் ஒருநாள் சரீர இச்சைக்கு அவள் குடும்பத்தின் ஒருஜென்ம மகிழ்ச்சி இரையாவதா :expressionless:??;

அரும்புகளின் மொட்டு விரியும் முன்னே கசக்கி வளர்த்தவர் முன்னிலையில் கண்கலங்க சிதைத்தவனுக்கு ;

அச்செடியை வளர்த்தோர் முன்னிலையில் அரும்பை சிதைவுற செய்த கருவியை மட்டும் தீயிடவேண்டும் ;

பாதுகாப்பு என்ற சொல்லிற்கு அர்த்தமில்லை என்னும் சமூகத்தில் பிறந்துவிட்டு பெண்களுக்கு நீதி வேண்டி அலைகிறோம் !!

அன்று பெண்பிள்ளைப் பிறந்தால் சிசுக்கொலை ;
இன்று பெண்பிள்ளைப் பிறக்கும் முன்பு கருக்கொலை ;
பெண் பிள்ளை பிறந்தாலே பாலியல் படுகொலை …
இவற்றை தகர்த்து எறியாமல் பெண் சுதந்திரம் பெற்றோம் என்று கூறி பயனில்லை🤷🙅.

— Kowsalya Gnanasekaran :heart: