Community

விளையாட்டின்... வினை

இந்த கதை சில உண்மை சம்பவங்களையும் அதன் விளைவுகளையும் மையப்படுத்தி எழுதியுள்ளேன் …

இந்த காலக்கட்டத்தில் சமூக வளைதலம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது…

இந்த சமூக வலைத்தளத்தாள் சில நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு …அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைதான் இப்பொழுது உங்கள் பார்வைக்கு எனது வரிகளில்

கல்லூரி படிக்கும் பெண்கள்… கல்லூரி என்றாலே மகிழ்ச்சி நட்பு வட்டாரம் என்று மிக அருமையாக இருக்கும் …

சில பெண்களுக்கு எப்பொழுதும் அவர்கள் அழகின் மீது ஒரு கெத்து இருக்கும் என் பின்னாடி நிறைய பசங்க சுற்றுகிறார்கள் என்று ஒரு கெத்தை பின்பற்றுவாங்க…

ஒரு நாள் அந்த கல்லூரில சில பொண்ணுங்க கூட்டமா உட்கார்ந்து ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்கிறார்கள்…

அது என்ன போட்டின்னா இப்போ இருந்து இன்னும் ஒரு மாதத்தில் யாருக்கு Instagram ல அதிக ஆண் நண்பர்கள் இருக்காங்களோ அவங்க இந்த போட்டியின் வெற்றியாளர் என்று தீர்மானிக்கிறார்கள்…

அதுல ஒரு பொண்ணு instagram ல பார்க்கிற பசங்க எல்லோருக்கும் அழைப்பு விடுத்தாள் …

நம்ம பசங்கள பற்றி தெரியாத ஒரு பொண்ணு அதுவும் அழகான ரம்யா என்று ஒரு பொண்ணு அழைப்புவிடுத்துன்னு தெரிந்ததும் அழைப்பை ஏற்றுக்கொண்டு நட்பு ஆகிறார்கள்…

சிறிது நாட்கள் அந்த ரம்யா என்ற பொண்ணு சில ஆட்களை மட்டுமே சேர்த்துக்கொண்டிருந்தாள்… ஆனால் அவளின் தோழிகள் இவளை விட அதிக நண்பர்களை சேர்த்துக்கொண்டிருந்தார்கள்…

என்ன செய்வது என்று யோசித்து அவளின் புகைப்படங்களை அதிக அளவு post செய்தாள்…

இப்போ ரம்யாவிற்க்கு அதிக likes. comments வந்துக்கொண்டிருந்தது …சில பசங்க ரம்யாவிற்க்கு message செய்ய ஆரம்பித்தார்கள் …இந்த பொண்ணும் அவர்களுக்கு எப்போவாது பதில் அனுப்பும்…

அதில் கார்த்திக் என்ற ஒரு பையனுக்கு ரம்யாவை மிகவும் பிடித்துவிடுகிறது . அவன் அந்த பொண்ணுக்கூட தினமும் message செய்ய ஆரம்பிச்சான் அந்த பொண்ணும் பதில் message செய்துக்கொண்டிருந்தது …

ஒரு கட்டத்தில் கார்த்திக் …ரம்யாவிடம் அவன் காதலை வெளிப்படுத்துகிறான். அவள் இவன் எதோ காமெடியாக சொல்லுகிறான் என்று எண்ணி…இந்த போட்டியில் வெற்றி பெற்ற உடன் எல்லோரையும் Block பண்ணிடலாம்…அது வரைக்கும் பொறுத்துக்குவோம் என்று வேண்டா வெறுப்பாக message செய்துக்கொண்டிருந்தாள் …

ஆனால் கார்த்திக்கிற்க்கு அவளிடம் message செய்வது ஒரு போதைப்பழக்கம் போல் ஆகிவிட்டது …ஒரு நாள் அவளிடம் செய்யாவிட்டாலும் பைத்தியமாக மாறிவிடுவான்…

ஒரு மாதம் முடிந்தது ரம்யா இந்த போட்டியில் வெற்றி பெற்றால் …

வெற்றி பெற்ற உடனே அந்த instagram கணக்கில் உள்ள ஆண்களை எல்லாம் Block செய்தால்…

கார்த்திக் message  செய்துக்கொண்டே இருந்தான் ரம்யா பதில் அழிக்கவில்லை ஒரு வாரமாக செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தான்..அவன் அப்படி இருப்பதை பார்த்த கார்த்தியின் நண்பர்கள் மச்சான் அவ எதோ உன் கூட Tine pass க்கு message பண்ணியிருக்கா நீ ஏடா உண்மையா எடுத்துக்குற விடுடா என்று சொல்கிறான் ...

அப்பொழுது கார்த்திக் உணருகிறான் ரம்யா என்ன ஏமாத்திட்டா ....என்ன ஏமாத்துனவ சந்தோஷமா இருக்கக் கூடாது என்று யோசித்து என்ன செய்யலாம் என்று இரவு முழுவதும் அதைப் பற்றி மட்டுமே யோசிக்கிறான்..

நேரில் எதாவது செய்யலாம் என்றால் அவள் வேறு ஒரு ஊரைச் சேர்ந்தவள்… என்ன செய்யலாம் என்று யோசித்து போனை எடுக்கிறான் .அதில் ரம்யா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அனைத்து போட்டோவையும் கார்த்திக் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளான்…

அந்த போட்டோவை வைத்து எதாவது செய்ய வேண்டும் அதை அவள் சாகும் வரை மறக்கக்கூடாது என்று யோசித்து …

உடனே ஒரு பொலி instagram கணக்கை உருவாக்கி அதில் ரம்யா புகைப்படத்தை post செய்து மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து … இவ பெயர் ரம்யா விபச்சாரம் செய்கிறாள் …ஆர்வமுடையவர்கள் இந்த பொண்ணுக்கு message பண்ணுங்க என்று சொல்லி அவளின் FB,Instagram கணக்கை பெயருடன் பதிவிட்டான்…

நீண்ட நாட்கள் கழித்து ரம்யா அவளின் சமூகவளைத்தளத்தை open செய்கிறாள் …அப்பொழுது அவளுக்கு அதிகமான அளவு message வந்திருந்தது .அதை படித்துப்பார்த்தால் அசிங்கமான வார்த்தைகள் மிகவும் மோசமான வார்த்தையால் message வந்திருந்தது …ஒருவன் என்னம்மா ரம்யா ஒரு நைட்டுக்கு எவ்வளவு பணம் என்று கேட்டிருந்தான் …அவளுக்கு என்னவென்று புரியாமல் நின்றால் வெளியில் சொல்லவும் முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் …

எதற்க்காக இவர்கள் நமக்கு இந்த மாதிரி தப்பான message செய்கிறார்கள் என்று யோசிக்கிறாள்…

உடனே instagram யை ஓபன் செய்து பார்க்கிறாள் அதில் ஒரு கணக்கில் எனது பெயர் ரம்யா எனக்கு 24 வயதாகிறது நா ஒரு Call Girl …விருப்பம் இருக்கவங்க எனக்கு message செய்ங்க என்று ரம்யாவின் instagram and Fb account details போடப்பட்டிருந்தது …இதை பார்த்த ரம்யா அதிர்ச்சியடைகிறாள்…

ஒரு நண்பரின் உதவியுடன் போலீஸ்ல கம்ளைன் செய்கிறாள்… அப்பொழுது தான் தெரிகிறது இது ஒரு பொலிக்கணக்கு என்று …

"இப்போ இருக்க 'technology 'ல ஒரு பொலியான கணக்கை உருவாக்குவது மிகவும் சுலபமான ஒன்று "அவன் தற்காலிமாக ஒரு email கணக்கை உருவாக்கி இதை செய்திருக்கிறான் என்று தெரியவருகிறது…

இந்த தகவல்களை எல்லாம் கண்டுபிடிப்பதற்க்குள் ரம்யாவை பற்றி தவறாக பேச ஆரம்பித்துவிட்டார்கள்…

ரம்யா வீட்டிற்க்கு கூட வராமல் போலீஸ்காரர்களிடம் சேர்ந்து யார் இதை செய்திருப்பார்கள் என்று அவர்களுடனே சுற்றி திறிகிறாள்…

ரம்யா வீட்டிற்க்கு அருகில் இருக்கும் சில பக்கத்துவீட்டுகாரர்களுக்கு இந்த விஷியம் தெரிய வருகிறது…

அவர்கள் ரம்யா வீட்டிற்க்கு செல்கிறார்கள் ரம்யா வீட்டில் ரம்யாவின் அம்மா அப்பா மட்டும் உள்ளார்கள் …பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து என்ன அக்கா உங்க பொண்ணு இப்படிப்பட்ட வேலையே பார்க்கிறாள் என்று கேட்கிறார்கள் … ரம்யாவின் அம்மாவிற்க்கு எதுவும் புரியாமல் திகைத்து நிற்கிறாள் …

என்ன பண்ணா என் பொண்ணு என்று கேட்க அதற்க்கு அவர்கள் இந்த போனை கொஞ்சம் பாருங்க என்று சொல்ல அதை பார்த்த ரம்யாவின் அம்மா ஒரு நிமிடத்தில் மனம் உடைந்து கீழே விழுந்தாள் …

ரம்யாவின் அம்மா உடனே இது என் பொண்ணு இல்ல ஏறோ தப்பா போட்டு இருக்காங்க என்று சொன்னால் …ஆனால் அதற்க்கு அந்த பக்கத்து வீட்டுகாறர்கள் அக்கா இது உன்னோட பொண்ணுதான் இங்க பாரு எவ்ளோ போட்டோ இருக்குன்னு …இந்த போட்டோ எப்படி உன்னோட பொண்ணு கொடுக்காம போட்டோ அவங்களுக்கு போகும் என்று எல்லோரும் ரம்யாவை பார்த்து தவறாக பேசினார்கள்…

அந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் எல்லாம் இந்த மாதிரி ஒரு பொண்ண பெத்தத்துக்கு நீங்க பேசாம செத்துப்போயிடலாம் என்று சொல்ல ... ரம்யாவின் அப்பாவும் அம்மாவும் அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்க்கொலை செய்துக்கொள்கிறார்கள்...

ரம்யா போலீஸிடம் சென்று விசாரணை நடத்தி அந்த பையனை கண்டுபிடிக்க முடியவில்லை … அதனால் அந்த instagram கணக்கு மற்றும் ரம்யாவின் புகைப்படம் அனைத்தும் நீக்கிவிட்டு …எல்லா பிரச்சனையும் முடிந்து வீட்டுக்கு வருகிறாள்…

வீட்டில் வந்து பார்த்தால் ரம்யாவின் அப்பா அம்மா இரண்டு பேரும் தூக்கிட்டு தற்க்கொலை செய்துகொண்டு இருந்தனர்.அதை பார்த்த ரம்யா அவர்கள் உடலை பிடித்து அழுகிறாள்…

உடனே அக்கம் பக்கத்தினர் வந்து உன்னால தான் உன்னோட அப்பா அம்மா ரெண்டு பேருமே தற்க்கொலை செய்துக்கொண்டார்கள்…நீ நல்ல பொண்ணுன்னு நினைச்சிட்டு இருந்தோம் ஆனா நீ இப்படிப்பட்ட ஒரு வேலை செய்து தான் வாழறன்னா நீ பேசாம செத்துப் போயிடு …

அக்கா இல்ல நா அந்த மாதிரி பொண்ணு இல்ல ...யாரோ என்னை பிடிக்காதவங்க இந்த மாதிரி செஞ்சிட்டாங்க. என்று சொல்ல அதற்க்கு அவர்களோ உன்னோட புகைப்படம் எப்படி அவங்களுக்கு போச்சி அதுவும் ஒரு புகைப்படம் ன்னா ஒகே எதோ தெரியாம போயிடுச்சி ன்னு சொல்லலாம் . ஆனா அவங்க உன்னோட எல்லா புகைப்படத்தையும் வச்சியிருக்காங்க .அப்போ நீ அந்த மாதிரி பொண்ணுதான என்று சொல்லி அனைவரும் ரம்யாவை திட்டித்தீர்க்கிறார்கள்.....

அவள் என்ன செய்வது என்று தெரியாமல் .... நான் என்னை எல்லோரும் சமூகவளைத்தளத்தில் பின்தொடறனும் .. நம்ம போடுற புகைப்பட்த்துக்கு எல்லாம் அதிக likes வரணும் என்று  நினைத்து நான் விளையாட்டாக செய்தது வினையாக வந்து என்னுடைய அம்மா அப்பா வை தூக்கிலிட செய்தது என்னையும் இந்த சமூகத்தின் முன்னால் ஒரு விபச்சாரியாக சித்தரித்தது ... இனி நான் வாழ்ந்தாள் வாழ்நாள் முழுக்க இந்த விபச்சாரி என்ற பட்டத்தை சுமந்துதான் வாழ வேண்டும் ..அந்த வாழ்க்கையை வாழ எனக்கு விருப்பம் இல்லை ... அதனால் நான் போகிறேன் இந்த உலகைவிட்டு.....

இனி என்னைப்போல் யாரும் இந்த மாதிரி விளையாட்டாக எந்த ஒரு தவறையும் செய்ய வேண்டாம் … பெண்கள் முக்கியமாக அவர்கள் புகைப்படத்தை பாதுகாப்பாக வெளியிடுங்கள் …

ஒரு போட்டிக்காக செய்த ஒரு தவறு …எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணருங்கள் … என்று சொல்லி தன் உயிரை மாய்த்துக்கொண்டால் … ரம்யா

இப்படிக்கு
ரம்யா

A Story By
M. Moorthi