Community

என் உயிரின் வரவே

அற்புத ஆருயிரே
அள்ளிக் கொஞ்சிடும் பேரழகே
ஆகாச வெளிச்சமே
ஆளவந்த ஆதவனே
இதயத்தின் இதமே நீ
இன்பத்தின் எல்லை நீ
ஈடில்லா செல்வம் நீ
ஈகமான தேகம் நீ
உன்னத உயிரே
உயிரின் வரவே
ஊர் போற்றும் உத்தமனாய்
ஊசித்துளை மன்னவனாய்
என்வழி வந்தவனே
என்னிறை கலந்தவனே
ஏழ்கடலின் சிந்தனையும்
ஏற்றம் பெற கொண்டிடனும்
ஐ நீயே
ஐயமின்றி வாழ்ந்திடனும்
ஒழுக்கத்தை கைகொண்டு
ஒப்பற்ற தனித்துவமே
ஓரளவு சினம் கொண்டு
ஓயாத உழைப்பவனாய்
ஓளவை போல் ஞானம் பெற்று
ஔடதமாய் இருந்திடனும்
என் மகனே

என்றும் அன்புடன்_முகம்மது பஷீர்