Community

பிரியாவிடை பெற்ற நானும் என் தனிமையும்

இணைதலில் தொடங்கி,
ஒரு நொடியை இரு மடங்காய் வாழ்ந்து,
புரிதலின் எல்லையில் பிரிதலில்
பயணித்து,
நினைவிலிருந்து மீள்தல் வரையில்., உன்னோடு பேசிய வார்த்தைகள் அனைத்தும் மௌனத்தின் சத்தமாய் நான் பிரசவித்த கவிதைகளில் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கிறது…

மறக்க மறுக்கும் நினைவுகள்…
ஏற்க மறுக்கும் ஏமாற்றங்கள்…
மனம் விரும்பாத பிரிவுகள்.,
செயல்களால் மட்டும் தொடர்கிறது கடைக் கண் விழி அவனை கடக்கும் போது கூடிய ஏக்கங்களோடு