Community

மண்பானை...........!

வேறுபட்ட சாதியிடையே ஓடிய நதியை… கைக்குவளையில் எடுத்து…!
சுடுபட்ட இத்தாய் மண்ணில்-அவன்
உடல் இரத்தம் நனைய!
இரத்தத்தில் நனைந்த இம்- மண்ணில்
எனை பிடித்தான் எளியவன்…!
பிடித்த மண் கூடக் காயாமல்-அவன்
வயிறு காய்ந்து பிடிக்க…!
பசி பிணியால் தலைச் சுழற்ற…-எனை
சுழற்றினான் முதியவன்…!
தோற்று வித்தவன் மாய்ந்தான்
எளியவன் என்று…-தோன்றினேன்!!
மண் கலப்படமான எனை-மன
கலப்படமான மானிடனே…!!
என்னூள் ஊற்றி நீ பருகுவதா??
_என்றும் விவசாயத் தோழன்
Amal vet