Community

மாட்டேன் கண்ணே!

சிகையென்று‌ நீயானால்
உனை‌ உதிரவிட மாட்டேன்!
விழியென்று நீயானால்
அதைக் கலங்கவிட மாட்டேன்!

நாசியென நீயானால்
சுவாசிக்க மாட்டேன்!
உதடாக நீயானால்
உரிந்துவிட மாட்டேன்!

நாவாக நீயானால்
சுவைகாண மாட்டேன்!
கரம் என்று நீயானால்
இருக்கி பிடிப்பது மாட்டேன்!

மார்பாக நீயானால்
துடிக்க விட மாட்டேன்!
பாதமாய் நீயானால்
முள்ளெய்த மாட்டேன்!

கண்ணீராய் நீ வந்தால்
புன்னகைக்க மாட்டேன்!
நிலமாக நீ இருந்தால்
அகழ்வாய மாட்டேன்!

நீராக நீ பொழிந்தால்
அருந்தி விட மாட்டேன்!
நெருப்பாக நீ எரிந்தால்
நெருங்கிவர மாட்டேன்!

வெயிலாய் நீ வந்தால்
நிழல் தேட மாட்டேன்!
மழையாக நீ வந்தால்
குடை பிடிக்க மாட்டேன்!

கனவாக நீ இருந்தால்
கண் விழிக்க மாட்டேன்!
நினவாக நீ இருந்தால்
கண்மூட மாட்டேன்!

சொர்க்கம் என நீ இருந்தால்
உயிர் வாழ மாட்டேன் கண்ணே!
உயிர் வாழ மாட்டேன்!